அந்த பழக்கத்தை நிறுத்திட்டேன்.. கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய நடிகை சோனா!!

1644

சோனா..

நடிகர் அஜித் நடிப்பில் கடந்த 2001ஆம் ஆண்டு வெளியான பூவெல்லாம் உன் வாசம் என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை சோனா. தொடர்ந்து தமிழ் மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வந்த இவர் கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான பத்து பத்து என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் கவர்ச்சியாக தன்னை அடையாளப்படுத்தினார்.

ஹீரோயினாக அறிமுகம் ஆன பொழுது நான் தான் நமிதாவுக்கு காம்பிடிஷன் அவருடைய இடத்தை நான் நிச்சயம் பிடிப்பேன் நமீதாவை ஓரங்கட்டிவிட்டு கவர்ச்சி நாயகியாக உருவெடுப்பேன் என்று பத்திரிகைகளில் பேட்டி கொடுத்திருந்தார். அதன்பிறகு இவர் நடிப்பில் வெளியான அத்தனை படங்களிலும் இவரது கவர்ச்சி பொம்மையாகவே பயன்படுத்தினார்கள். கடந்த 2018ஆம் ஆண்டு நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளியான ஜானி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இடையில் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் ஆகியோர் மீது பரபரப்பு புகார் ஒன்றை வைத்திருந்தார் நடிகை சோனா அதன் பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் இல்லாமல் போனது. சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகை சோனா தன்னுடைய இளம் வயதில் இருந்த ஒரு பழக்கம் குறித்து வெளிப்படையாக பேசி இருக்கிறார். அதில் அவர் கூறியதாவது தற்பொழுது நான் முதிர்ச்சியான மனநிலையில் இருக்கிறேன். கவர்ச்சியாக நடிப்பது எனக்கு போரடித்துவிட்டது.


இதனால் பட வாய்ப்புகள் வரவில்லை என்றாலும்கூட நான் இப்போது நிம்மதியாக இருக்கிறேன். சினிமாவில் அறிமுகமான புதிதில் இருந்து சினிமா என்றாலே ஒரு போதை என்ற எண்ணத்தில் நான் இருந்தேன். மட்டுமில்லாமல் குடி பழக்கத்திற்கு அடிமையாக இருந்தேன். கேமராவிற்கு முன்பு வந்த நடிக்கும் பொழுது மது அருந்திவிட்டு நடித்தால் நடிப்பதற்கு ஈசியாக இருக்கும் என்று ஆரம்பித்து ஒரு கட்டத்தில் நான் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகும் அளவுக்கு சென்று விட்டேன்.

ஆனால் தற்போது குடிப்பழக்கத்தை நிறுத்தி விட்டேன். ஒரு முதிர்ச்சியான மனநிலையில் இருக்கிறேன். சாதாரண பெண்களை போல நானும் வாழ வேண்டும் என்ற எண்ணம் மனதில் வந்திருக்கிறது. நிம்மதியாக வாழ்வதற்கு பணம் முக்கியம் கிடையாது என்பதையும் நான் உணர்ந்திருக்கிறேன். தொடர்ந்து குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். அதற்கேற்றார்போல பட வாய்ப்புகளும் வருகிறது. அதன் மூலம் கிடைக்கும் சொற்ப வருமானம் எனக்கு போதுமானது.

என்னுடைய வாழ்க்கையை நகர்த்த அதுவே எனக்கு அதிகபட்சமாக தெரிகிறது. இனிமேல் என்னை கவர்ச்சியாக பார்க்க முடியாது என்று கூறியுள்ளார் நடிகை சோனா.பொதுவாகவே நடிகைகள் தங்களுக்கு குடிப்பழக்கம் இருக்கிறது என்பதை வெளிப்படையாக ஒப்புக் கொள்ள மாட்டார்கள் ஆனால் நடிகை சோனா கூச்சமே இல்லாமல் வெளிப்படையாக கூறி அதிலிருந்து விடுபட்டு விட்டதாகவும் தன்னுடைய புது வாழ்க்கையை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் கூறி இருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துகிறது.

Sona Hot in Sokkali Movie Photos Stills