அமெரிக்காவில் 13 வயது சிறுமியை வீட்டுக்கு வரவழைத்து துஷ்பிரயோகம் செய்த இளைஞன்! நீதிமன்றம் கொடுத்த தண்டனை!!

579

அமெரிக்காவில்……..

அமெரிக்காவில் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் இளைஞனுக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Riegelwood-ஐ சேர்ந்தவர் Dominique T. Banks (21). இவர் கடந்த 2019ஆம் ஆண்டு 13 வயது சிறுமி ஒருவரை தனது வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்.

பின்னர் சிறுமியை பலாத்காரம் செய்திருக்கிறார். இது தொடர்பான புகாரின் பேரில் Dominique T. Banks-ஐ பொலிசார் கைது செய்தனர்.


அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சிறார் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் அவருக்கு தண்டனை வழங்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.

சிறை தண்டனையோடு பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டில் Dominique T. Banks கையெழுத்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.