தமிழகத்தின்..

தமிழகத்தின் கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த வளையாம்பட்டு ஊராட்சியை சேர்ந்த பாஸ்கர், இவரது தாயின் பெயர் செல்வி. பாஸ்கர் பொறியியல் முதலாம் ஆண்டு படித்து கொண்டு இருக்கும் போது, அவரது தம்பி விவேக் 11ம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்துள்ளார்.

அப்போது அவரது தந்தை துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து மனைவி செல்வி தன்னுடைய பாஸ்கர் மற்றும் விவேக் ஆகிய இரண்டு குழந்தைகளையும் தனியாக வளர்த்து வந்துள்ளார்.
கல்லூரி முடித்து வேலைக்காக வெளியே சென்ற போது, அவரிடம் புத்த வாசிப்பு பழக்கம் அதிகரித்துள்ளது, அப்போது பெரியார், கலைஞர் ஆகியோரின் மறுமணம் குறித்த புத்தகங்களை அதிகமாக படிக்க தொடங்கியுள்ளார்.

மேலும் புத்த வாசிப்பு மூலம் நண்பர்கள் பெருகியதுடன் அவரது சிந்தனையும் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்து கொண்டே சென்றுள்ளது.
இதற்கிடையில் நம் வீட்டிலும் அம்மா தனியாக இருக்கிறாரே, அவருக்கு ஏன் மறுமணம் செய்து வைக்க கூடாது என்ற எண்ணம் பாஸ்கருக்கு வந்துள்ளது. இதற்கு அண்ணன் பாஸ்கரை அப்படியே பின்பற்றும் தம்பி விவேக்கும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

ஆனால் இருவருக்கும் இந்த பேச்சை எவ்வாறு அம்மாவிடம் தொடங்குவது என்று தெரியாமல் இருந்துள்ளனர். இந்நிலையில் தாய் செல்வி ஒருநாள் தன்னுடைய மகன் பாஸ்கருக்கு திருமணம் செய்து வைப்பது தொடர்பாக பேச தொடங்கியுள்ளார்.
அப்போது விளையாட்டாக நீண்ட நாட்களாக தனியாக நீ கஷ்டப்படுகிறாய், அதனால் நீ முதலில் திருமணம் செய்து கொள் அப்போது தான் நான் பண்ணிக் கொள்வேன் என தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு இது குறித்து இரண்டு மகன்களும் தாய் செல்வியிடம் பேசி வந்துள்ளனர். 2 மகன்களின் சில ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு தாய் செல்வி திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
உறவினர்கள் இதற்கு முற்றிலுமாக மறுப்பு தெரிவித்த நிலையில், கஷ்டமான காலத்தில் நமக்கு உதவி செய்யாத உறவினர்கள் இப்போது மட்டும் ஏன் அவர்களின் எண்ணங்களை நாம் கருத்தில் கொள்ள வேண்டும் என நினைத்து திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

மூத்த மகன் இது தொடர்பாக முதலில் என்னிடம் பேசிய போது அதிர்ச்சியாக இருந்தது, ஊர் என்ன பேசும் என்று அவர்களை கண்டித்தேன், உங்களுக்கு என்று ஒரு துணை இருந்தால் வெளியூரில் வேலை செய்யும் போது நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள் என்று நாங்கள் அங்கு நிம்மதியாக இருப்போம் என தெரிவித்தனர்.
மேலும் இது உங்களை போன்று கணவர்களை இழந்து தனியாக வாழும் பெண்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் என தெரிவித்தனர். அதே சமயம் நான் கணவரை இழந்த நின்ற போது பலர் அதை அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்தி என்னிடம் தவறாக நெருங்க அணுகியுள்ளனர்.

திருமண உறவு என்றால் பாலியல் மட்டுமே இல்லை. நட்புறவோடு உறுதுணையாக ஒருவர் உங்களுக்கென இருக்கிறார் என்பதே தனி தைரியத்தை வழங்கும்,” என்கிறார் செல்வி. இறுதியில் அம்மாவும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து விட்டார்,

ஆனால் அதற்காக மனைவியை இழந்தவர் யாரையாவது திருமணம் செய்து வைத்து எங்கள் கடமையை முடிக்க நாங்கள் விரும்பவில்லை. என மூத்த மகன் பாஸ்கர் தெரிவித்துள்ளார். அவருக்காக பார்க்கும் நபர்களிடம் சில நாட்கள் பேசி பழகி பிறகு சம்மதம் என்றால் மட்டும் மேற்கொண்டு பேசுவோம் என தெரிவித்தோம்.

இறுதியில் அம்மாவுக்கு தற்போது மணந்துள்ள அப்பாவை பிடித்து இருந்ததால் அவர்கள் இருவரும் மறுமணம் செய்து கொண்டுள்ளனர். அம்மா செல்வி தற்போது விவசாய தொழிலாளியான ஏழுமலை என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார், அவர் தன்னை அன்பாக பார்த்துக் கொள்வதாகவும், அனைத்து வேலைகளையும் இழுத்து அடித்து கொண்டு செய்வதாக சிரிப்புடன் தெரிவித்துள்ளார்.















