அம்மிக்கல்லை தலையில் போட்டு மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்.. அதிகாலையில் நடந்த பயங்கரம்!!

622

தமிழகத்தில்..

காஞ்சிபுரம் மாவட்டம் சங்கராபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர். கல் உடைக்கும் தொழிலாளி. இவரது மனைவி செல்வராணி (35). இவர்களுக்கு 2 மகன், 1 மகள் உள்ளனர்.

தம்பதிக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்றிரவு தகராறு ஏற்பட்டுள்ளது. மனைவியை கடுமையாக திட்டினார் ஸ்ரீதர். பின்னர் சிறிது நேரம் கழித்து சாப்பிட்டனர். கோபத்தில் இருந்த ஸ்ரீதர், சாப்பிடாமல் தூங்கினார்.

மனைவி மீதான கோபத்தால் ஸ்ரீதருக்கு தூக்கம் வரவில்லை. இன்று அதிகாலையிலேயே எழுந்தார். கோபம் தீரவில்லை. ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற ஸ்ரீதர், வீட்டில் இருந்த அம்மிக்கல்லை தூக்கி, ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த செல்வராணி மீது போட்டார்.

இதில், பயங்கர அலறல் சத்தத்துடன் ரத்த வெள்ளத்தில் செல்வராணி துடித்தார். சத்தம் கேட்டு பிள்ளைகள் எழுந்தனர். அவர்களும் சம்பவத்தை பார்த்து அலறி கூச்சலிட்டனர்.


பக்கத்து வீட்டாரும் எழுந்து வந்து பார்த்தனர். சிறிது நேரத்தில் செல்வராணி பரிதாபமாக இறந்தார். பின்னர் மனைவியை கொலை செய்தது குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஸ்ரீதர் போன் செய்தார்.

பின்னர் வீட்டை விட்டு வெளியேறினார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஸ்ரீதரை காணவில்லை. அவரை தேடினர். அப்போது, அதே பகுதியில் உள்ள எடமச்சி பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தார். அவரை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

அப்போது, மனைவி மீதான சந்தேகத்தில் இப்படி செய்து விட்டேன் என்று கூறியதாக தெரிகிறது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.