அரசு ஊழியர் உள்பட 2 பேர் தலை துண்டித்து கொலை : மாவோயிஸ்ட் அட்டூழியம்!!

74

தெலங்கானா மாநிலத்தில் மாவோயிஸ்ட்கள் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் போலீசாருக்கு தகவல் கொடுத்து வந்ததாக கூறி, தெலங்கானாவின் முலுகு மாவட்டத்தை சேர்ந்த அரசு அதிகாரி உள்பட 2 பேரை மாவோயிஸ்ட்கள் தலையை வெடித்து படுகொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.

தெலங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் கிராம பஞ்சாயத்து செயலாளா் ஆவார்.

இதேபோல் அர்ஜுன் என்பவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவர்கள் 2 பேரும் ஜன்கலபள்ளி வனப்பகுதியில் பதுங்கி உள்ள மாவோயிஸ்ட்கள் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்து வந்துள்ளனா்.

இதுபற்றி அறிந்த மாவோயிஸ்ட்கள் இன்று காலையில் அவர்கள் 2 பேரையும் வீடுகள் முன்பு வைத்து தலையை வெட்டி படுகொலை செய்தனா்.