அறையை சுத்தம் செய்த பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த ஆபீசர்… பின்னர் நடந்த விபரீதம்!!

424

சென்னை…

சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில். மத்திய அரசின் வருமான வரித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலகங்கள் இயங்கி வருகிறது. அதனாலேயே சாஸ்திரி பவன் வளாகம் எப்பவுமே பரபரப்பாக காணப்படும்.

இந்த சாஸ்திரி பவனில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில், வரி விதிப்பு சீனியர் அதிகாரியாக வேலை பார்த்து வருபவர் ரெக்ஸ் கேப்ரியல் பிராங்க்டன். அண்ணாநகரை சேர்ந்தவர். 36 வயதாகிறது.

12 வருடங்களாகவே இங்கு வேலை பார்த்து வருகிறார். இதே வருமான வரித்துறை அலுவலகத்தில் ஒரு இளம்பெண் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவரும் 5 வருடமாகவே அங்கு வேலை பார்க்கிறார். இந்த பெண் கணவனை இழந்தவர். கடந்த 2016ல் இறந்துவிட்டார். இவருக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.


துப்புரவு வேலையை செய்து, அந்த குழந்தைகளை காப்பாற்ற வருகிறார். காலையில் ஊழியர்கள் தங்கள் பணிகள் ஆரம்பிப்பதற்கு முன்பே, இந்த பெண் சாஸ்திரி பவனுக்கு வந்துவிடுவார். முன்கூட்டியே வந்து, அலுவலகங்களை சுத்தப்படுத்தும் வேலையில் ஈடுபடுவார்.

அப்படித்தான், கடந்த 14ம் தேதியும் வருமான வரித்துறை அலுவலகத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தார். ஆனால் வழக்கத்துக்கு மாறாக, சீனியர் அதிகாரி ரெக்ஸ் அன்றைய தினம் சீக்கிரமாகவே அங்கு வந்துவிட்டார். ரெக்ஸ்ஸின் ரூமை அந்த பெண் சுத்தப்படுத்தி கொண்டிருந்தார்.

அந்த ரூமில் சக ஊழியர்களும் யாரும் அப்போது இல்லை. அந்த இளம்பெண்ணின் அருகில் வந்து நின்ற ரெக்ஸ், என்னுடைய ரூமை நன்றாக கிளீன் செய்ய வேண்டும் என்று சொல்லி, ஒவ்வொரு வேலையாக வாங்கி உள்ளார். அந்த பெண்ணும், ரெக்ஸ் சொன்னபடியே, ரூமை சுத்தம் செய்தார்.

ஆனால், திடீரென ரெக்ஸ், ரூம் கதவை திறந்து வெளியே யாராவது வருகிறார்களா என்று பார்த்துள்ளார். ஒருவரும் அங்கே வரவில்லை என்பதை உறுதி செய்ததும், டக்கென ரூமை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுவிட்டு, அந்த பெண்ணை பின்பக்கமாக சென்று கட்டிப்பிடித்து சரமாரியாக முத்தம் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்.

இதை கொஞ்சமும் அந்த பெண் எதிர்பார்க்கவில்லை.. அதிர்ந்து போன அப்பெண், ஐயா என்னை விட்டுடுங்க என்று கெஞ்சியவாறே, அவரிடம் இருந்து விலக முயற்சி செய்துள்ளார். ஆனாலும் ரெக்ஸ். அந்த பெண்ணின் கதறலை காதில் வாங்காமல், பா.லி.ய.ல் ரீ.தியாக தொ.ந்தரவு செய்துள்ளார்.

அதற்கு பிறகு வேறு வழியில்லாமல், அந்த பெண் கத்தி கூச்சல் போட்டார். ரெக்ஸை தள்ளிவிட்டுவிட்டு, ரூம் கதவை திறந்து கொண்டு, வெளியே அழுது கொண்டே ஓடிவந்தார். சக ஊழியர்கள் சத்தம் கேட்டு ஓடிவந்தனர். ஆடைகள் கலைந்து, அழுதபடியே வெளியே வந்த பெண்ணை பார்த்ததும் பதறிப்போய்விட்டனர்.

அதற்கு பிறகுதான் ரூமுக்குள் சென்று பார்த்தால், ரெக்ஸ் திருதிருவென விழித்து கொண்டு நின்றிருக்கிறார். துப்புரவு பணியாளருக்கு பா.லி.ய.ல் தொந்தரவு கொடுத்ததும் அலுவலக ஊழியர்களுக்கு தெரியவந்தது. பிறகு, அந்த பெண் பணியாளரை, சக வருமான வரித்துறை அதிகாரிகள் சமாதானம் செய்ய முயன்றனர்.

ஆனாலும், அவர் அழுதுகொண்டே இருந்தார்.. “அந்த ஐயா செய்தது தவறு.. நான் எப்படி மறக்க முடியும்?” என்று சொல்லி அழுதார். இதற்கு பிறகுதான், வருமான வரித்துறை உயர் அதிகாரிகள் நடந்த சம்பவம் குறித்த விசாரணையை ஆன் தி ஸ்பாட்டில் நடத்தினர். அப்போதுகூட அந்த பெண்ணுக்கு கோபமும், அதிர்ச்சியும் தணியவில்லை.

நேராக ஆயிரம்விளக்கு மகளிர் ஸ்டேஷனுக்கு போய்விட்டார். அதிகாரி மீது புகார் தந்தார். இந்த புகாரின்பேரிலும், போலீசார் நேரடி விசாரணையை நடத்தினர். மேலும், அந்த ஆபீசில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர். அப்போதுதான், பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் தந்த நிகழ்வு வீடியோவில் அப்பட்டமாக பதிவாகி இருந்தது.

5 வருடமாக அந்த பெண் அங்கேயே வேலை பார்த்து வரும்போது, திடீரென இப்போது பா.லி.ய.ல் தொ.ல்.லை.யை ரெக்ஸ் தந்திருந்தது சந்தேகத்தை கிளப்பியது. அதனால், ரெக்ஸின் செல்போனும் ஆய்வு செய்யப்பட்டது.. அப்போதுதான், கணவனை இழந்த இந்த பெண் மீது 5 வருட காலமாகவே ரெக்ஸ்ஸுக்கு ஒரு கண் இருந்து வந்தது தெரியவந்தது.

செல்போனுக்கு அடிக்கடி தொடர்பு கொண்டு, தன்னுடைய ஆசைக்கு இணங்கும்படி பா.லி.ய.ல் டா.ர்.ச்.சர் தந்து வந்ததும், அதற்கு அப்பெண் இறங்க மறுத்து வந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.

இதற்கு பிறகு, வருமான வரித்துறை அதிகாரி ரெக்ஸ் மீது ஐபிசி 354 (பெண்கள் மானத்துக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளுதல் மற்றும் பெண்களுக்கு எதிரான பா.லி.ய.ல் வ.ன்.கொ.டு.மை சட்டம் (பிரிவு-4) கீழ் வழக்கு பதிவு செய்து, கைதும் செய்தனர்.

ஆனாலும் அந்த பெண், அதிர்ச்சியிலேயே இருந்தார். ரெக்ஸ் கைதான பிறகும், நடந்த சம்பவத்தையே நினைத்து நினைத்து அழுது கொண்டேயிருந்தார். பிறகு, திடீரென கொசு மருந்தை குடித்து த.ற்.கொ.லை.க்கு முயன்றுள்ளார்.

இந்த பெண் மயங்கி கீழே விழுந்து கிடப்பதை பார்த்து, அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பிவிட்டாலும், மன உளைச்சலில் இருந்து அவரால் வெளியே வரவே முடியவில்லை.

என்னதான் தொழில்நுட்பமும், விஞ்ஞானமும், கல்வியும் வளர்ந்தாலும், ஒருஇளம்பெண் தனித்து வாழ்வது என்பது இந்த காலகட்டத்திலும் முடியாததாகவே உள்ளது.. அதிலும் கணவனை இழந்த பெண் என்றால், கூடுதல் சவால்.. கூடுதல் சுமை.. கூடுதல் வலி.