அழகிய மனைவி மற்றும் குழந்தைகளை கொடூரமாக கொலை செய்த கணவன்! நடந்த விபரீத சம்பவம்!!

721

இந்தியாவில் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை சுத்தியால் கொடூரமாக கொலை செய்த கணவனி செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.டெல்லி புறநகரில் உள்ள ஷிவ் பார்க் குடியிருப்பு வளாகத்தில் பிரீத்தி மற்றும் அவரது குடும்பத்தினர் கடந்த மாதம் குடியேறியுள்ளனர்.

பிரீத்தியின் கணவர் ககன் மதுபோதைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. ப்ரீத்தியின் பெற்றோர் அவர் வசித்த பகுதிக்கு அருகில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் வீட்டில் இருந்த மனைவி ப்ரீத்தி மற்றும் 2 குழந்தைகளை ககன் சுத்தியலால் கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த ப்ரீத்தி ரத்தவெள்ளத்தில் சரிந்து உயிரிழந்துள்ளார். ப்ரீத்தியின் பெற்றோர் அவரது வீட்டிற்கு சென்று பார்த்த போது ரத்த வெள்ளத்தில் கிடந்த மகளை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


இதையடுத்து இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட, பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அப்போது 9 வயது மகன் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார்.

அதேபோல் 5 வயதான மகளையும் ககன் கொடூரமாக அடித்துக் கொன்றுள்ளார். தப்பியோடிய ககனை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.