தமிழகத்தில் கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த பெண்ணின் அழகில் சொக்கிய நபர், மனைவியை தவிக்குவிட்டு சொத்துக்களை எல்லாம் அபகரித்துவிட்டு ஓட்டம் பிடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டத்தின், வீரவநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சுப்புராஜ்.
இவருக்கும் மும்பையில் வசித்து வந்த உறவுக்கார பெண்ணான ஜாய்ஸி என்பவருக்கும் திருமணம் ஆகியுள்ளது.
ஜாய்ஸி நல்ல வசதியான குடும்பத்தை சேர்ந்தவர், அவருக்கு தமிழ் அந்தளவிற்கு தெரியாது. இருப்பினும் நெல்லையில், சொந்த வீடு, நிலம் எல்லாம் இருந்ததால் சுப்புராஜை வீட்டோடு மாப்பிள்ளையாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களை பள்ளிக்கு கொண்டு சென்று விடுவது மட்டும் தான் சுப்புராஜின் வேலை, மற்ற படி எந்த வேலைக்கும் செல்லாமல் மாமியரின் வீட்டில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளார்.
அப்படி பள்ளியில் குழந்தைகளை விட செல்லும் போது, கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் பிரேமா என்பவர் சுப்புராஜிற்கு பழக்கம் ஆகியுள்ளார்.
பிரேமாவின் குழந்தைகளும் அந்த பள்ளியில் படிப்பதால், இருவருக்கும் போகும் போதும், வரும் போதும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிரேமா வில்லுப்பாட்டு பாடும் பழக்கம் கொண்டவராம், இதனால் அது தொடர்பான வீடியோவை டிக் டாக்கில் பதிவேற்றம் செய்து வந்துள்ளார்.இதைப் பார்த்ததும் சுப்புராஜிற்கு பிடித்து போக, அவரும் டிக் டாக்கில் அவருடன் சேர்ந்து வீடியோவை பதிவிட்டு வந்துள்ளார்.
அதன் பின் இவர்களின் பழக்கம் நாளைடைவில் நெருங்கி பழகும் அளவிற்கு ஏற்பட, ஜாய்ஸ் பெயரில் இருந்த சொத்தை எல்லாம் பிரேமா பெயருக்கு மாற்றியுள்ளார் சுப்புராஜ். ஜாய்ஸ்க்கு தமிழ் தெரியாது என்பதால், கணவன் கையெழுத்து போட சொன்ன இடத்தில் எல்லாம் கண்ணை மூடிக் கொண்டு ஜாய்ஸ் கையெழுத்து போட்டுள்ளார்.
சொத்துக்களை எல்லாம் எழுதி வாங்கிய பின்பு இந்த ஜோடி அங்கிருந்து கன்னியாகுமரிக்கு ஓடி வந்துவிட்டனர். கணவனும், சொத்துக்களை இழந்த விஷயம், அதன் பின்னரே தெரியவர, உடனடியாக ஜாய்ஸ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால், இது தொடர்பாக விசாரணை தாமதமாகி வருவதால், ஜாய்ஸ் கவலையில் உள்ளார்.
இதற்கிடையில் சுப்புராஜ் மனைவியான ஜாய்ஸின் புகைப்படத்தை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு, இவர் ஒரு விபச்சாரி என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஜாய்ஸ் உடனடியாக நெல்லை மாவட்ட எஸ்பியிடம் இது குறித்து புகார் கொடுக்க, இது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.