
இந்திய திரையுலகையே மிகவும் அதிர்ச்சியடைய செய்த விஷயம், பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்தின் தற்கொலை சம்பவம் தான்.

இந்த தற்கொலை சம்பவத்திற்காக பல விதமான சர்ச்சைகள் சமூக வலைத்தளங்களில் எழுந்தது. இந்நிலையில் இவரின் தற்கொலைக்கு மன ஆழுத்தங்கள் தான் காரணம் என கூறி வருகின்றனர்.

அந்த வகையில் பாலிவுட் மற்றும் கோலிவுட் இரண்டையும் சம்மந்தப்படுத்தி சுஷாந்த் மன அழுத்தத்திற்கு மீம் ஒன்றை உருவாக்கியுள்ளனர் நெட்டிசன்கள்.

ஆம் இளம் நடிகராக வளர்ந்து வரும் சுஷாந்த்தை விருது விழா ஒன்றில் முன்னணி நடிகராக திகழும் ஷாருக் கான் மேடையில் கிண்டலடித்து அவமானப்படுத்துகிறார்.

ஆனால் இங்கு அதே போல் சிவகார்த்திகேயன் தனது திரையுலக பணயத்தில் முதன் முறையாக ஒரு விருது வாங்கும் பொழுது அவரை, முன்னணி நடிகரான தளபதி விஜய் தோலில் தட்டி கொடுத்து வாழ்த்துவர்.

இதனை தற்போது மீம் செய்து பாலிவுட் திரையுலகை கேள்வி கேட்டு வருகின்றனர் ரசிகர்கள்.















