அவுஸ்திரேலிய மாப்பிள்ளையை கரம்பிடித்த குஜராத் பெண் : சுவாரஸ்ய காதல் கதை!!

944

குஜராத்தில்..

அவுஸ்திரேலியாவை சேர்ந்த தோபன் என்ற இளைஞர், இந்தியாவின் குஜராத் மாநிலத்தை பூர்விகமாக கொண்ட நமி நாகர் என்ற பெண்ணை இந்திய கலாச்சார முறைப்படி திருமணம் செய்துகொண்டார்.

குஜராத் மாநிலத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் சமீபத்தில் நடைபெற்ற திருமணத்தில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த தோபன் என்ற இளைஞர், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தனது காதலி நமி நாகரை அவரது குடும்பத்தினர் முன்னிலையில் கரம் பிடித்தார்.

குஜராத்தின் ஜூனாகத் மாவட்டத்தில் உள்ள மங்ரோலை பூர்வீகமாகக் கொண்ட நமியின் பெற்றோர் அவுஸ்திரேலியாவில் குடியேறி தற்போது அங்கு நிரந்தரமாக வசித்து வருகின்றனர். இவர்களது மகள் நமி அவுஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்த நிலையில், அவருக்கும் அவுஸ்திரேலியாவை சேர்ந்த தோபன் என்ற இளைஞருக்கும் காதல் உறவு மலர்ந்துள்ளது.


இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த போது, நமியின் தந்தை திகன்பாய் குஜராத்தில் உள்ள தனது சொந்த ஊரில் பாரம்பரிய இந்து முறைப்படி, திருமணம் நடைபெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.இதற்கு தோபன் குடும்பமும் சம்மதம் தெரிவித்த நிலையில்,

திருமணத்திற்காக அனைவரும் இந்தியாவுக்கு வந்துள்ளனர். இந்நிலையில் குஜராத் மாநிலத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் நடைபெற்ற திருமணத்தில் பாரம்பரிய குஜராத்தி மாப்பிள்ளை போல் உடையணிந்து குதிரையில் வந்த இறங்கிய அவுஸ்திரேலிய இளைஞர் தோபன், நமி நாசரை குடும்பத்தினர் முன்னிலையில் கரம்பிடித்தார்.

தனியார் ரிசார்ட்டில் நடந்த திருமணத்தில் பாலிவுட் இசைக்கு மணமக்கள் நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த திருமணத்தில் கலந்து கொள்வதற்காக அவுஸ்திரேலியாவில் இருந்து தோபனின் குடும்பத்தைச் சேர்ந்த 20 பேர் குஜராத்திற்கு வந்து இருந்தனர்.