ஆண்களே இதுக்கு பற்றாக்குறை இருக்கு… கொஞ்சம் கொடுத்து உதவுங்க! சீனாவின் விந்து வங்கி முக்கிய கோரிக்கை!!

399

கொரோனா வைரஸ் காரணமாக விந்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், சீனாவின் விந்து வங்கி ஒன்று ஆண்களிடம், விந்துவை நன்கொடையாக வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் இந்த கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவே ஒரு வித அச்சத்தில் உள்ளனர். ஏனெனில் இந்த கொரோனா வைரஸிற்கு மருந்து மட்டும் தான் தீர்வு என்பதால், மக்கள் வெளியில் வரவும் பயப்படுகின்றனர்.

இந்நிலையில், சீனாவின் விந்து வங்கி ஒன்று கொரோனா வைரஸ் காரணமாக விந்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், ஆண்கள் நன்கொடைகள் வழங்குபடி கேட்டுக் கொண்டுள்ளது.

இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், தென்மேற்கு சீனாவில் உள்ள ஒரு விந்தணு வங்கி ஆண் குடிமக்கள் தங்கள் விந்தணுக்களை தானம் செய்ய வேண்டும். அப்படி செய்வதன் மூலம் விந்து பற்றாக்குறையை தீர்க்க முடியும் என்று தெரிவித்துள்ளது.


கொரோனா வைரஸ் பரவலால், தன்னார்வலர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டதால், குறிப்பிட்ட பெற்றோர்களுக்கு உதவ முடியாமல் சிரமப்படுவதாக யுன்னான் மாகணத்தில் உள்ள கருவுறுதல் மருத்துவமனை தெரிவித்துள்ளது. 20 சதவிகித மக்கள் மட்டுமே தகுதிவாய்ந்த நன்கொடையாளர்கள் என்பதால் விந்தணுக்களின் தரம் குறைவாக இருப்பதால் இந்த பிரச்சினை தற்போது அதிகரித்துள்ளதாக மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், மருத்துவர் Li Wenfu கூறுகையில், வகை A மற்றும் வகை O இரத்தத்தில் (விந்தணுக்கள்) கடுமையான பற்றாக்குறைகள் உள்ளன. தொண்டு செய்யும் உள்ளூர் ஆண்களை தீவிரமாக பங்கேற்று நன்கொடைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ஆரோக்கியமான ஆண் சீன குடிமக்கள், 22 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள், தன்னார்வலர்களாக ஆவதற்கு தகுதியுடையவர்கள் என்று விந்தணு வங்கி தெரிவித்துள்ளது. ஆனால் முடி உதிர்தல் அல்லது கடுமையான குறுகிய பார்வை கொண்டவர்கள் இதில் பங்கேற்க முடியாது.

ஒரு தகுதிவாய்ந்த நன்கொடையாளராக தெரிவு செய்யப்பட்டவுடன், அவர் தன்னுடைய பங்களிப்பை செய்வதற்கு முன் மூன்று முதல் ஏழு நாட்கள் வரை பாலியல் நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்க வேண்டும்.

முழு செயல்முறையும் முடிய சுமார் எட்டு மாதங்கள் ஆகும் என்று Li Wenfu தெரிவித்துள்ளார். இதற்கு நன்கொடையாக விந்தணு கொடுக்கும் தன்னார்வலருக்கு 5,000 யுவான் வரை வழங்கப்படும் என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.