ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமை.. விரக்தியில் சிறுவன் எடுத்த விபரீத முடிவு!!

118

சென்னை வியாசர்பாடியில் வசிக்கிறார் நதியா. இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில், இவரது மகன் நவீன் (15), மகள் பிரியதர்ஷினி (13) ஆகியோருடன் வசித்து வருகிறார். கணவர் இல்லாததால் வேலை செய்து குழந்தைகளை கவனித்து வருகிறார்.

இந்நிலையில் இவரது மகன் நவீன் 10ம் வகுப்பு படித்து வந்தார்.மேலும் செல்போனில் வீடியோ கேம் விளையாடும் பழக்கம் உள்ள நவீன் எப்போதும் செல்போனில் கேம் விளையாடி வந்ததாக தெரிகிறது.

இதுகுறித்து பலமுறை அவரிடம் கூறியும் அவர் கேட்கவில்லை. நவீனை செல்போனில் வீடியோ கேம் விளையாடியதாக நதியா பலமுறை திட்டியுள்ளார்.

இந்நிலையில், நவீன் நேற்று செல்போனில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தார். இது தொடர்பாக தாய், மகன் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நவீன் வீடியோ கேம் விளையாடியதற்கு நதியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதனால் மனமுடைந்த மகன் நவீன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சென்னையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.