ஆமை புகுந்த வீடு உறுப்படாதா? இந்த திசையில் வைத்தால் வீட்டில் பணப் பற்றாக்குறையே இருக்காது! பேரதிர்ஷ்டம் தான்..!

2389

நமது வீட்டின் ஒவ்வொரு மூலைகளும் திசைகளும் இயற்கையில் பஞ்ச பூதங்களுடன் தொடர்புடையது.

அதன் படி வீட்டை அமைத்தால் நம் வீட்டிற்குள் சக்தி குடி கொள்ளும் என்று வாஸ்து முறைகள் கூறுகின்றன.

இந்த ஆற்றல் தான் நம் மனதை ஆட்டிப் படைக்கும் சக்தி. இது தான் நமது வேலை மற்றும் வாழ்க்கையை நிர்ணயிக்கிறது. நமது ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் ஒரு தீர்வு என்பது கண்டிப்பாக இருக்கும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

வாஸ்து சாஸ்திரப்படி சில பொருட்களை நீங்கள் வீட்டில் வாங்கி வைக்கும் போது கெட்ட சக்திகள் உங்களை விட்டு அகலுவதோடு பிரச்சினைகளும் உங்களை விட்டு பறந்தோடும்.


அப்படி பார்க்கையில் காற்றில் ஒலியோடு அசைந்தாடும் அழகான தொங்கும் பொருட்கள், புனித ஆமை உருவம் போன்றவை உங்கள் வீட்டில் உள்ள கெட்ட ஆற்றலை வெளியேற்றும்.

இவை அதற்குப் பதிலாக நேர்மறை ஆற்றலை வீட்டில் நிலவச் செய்து குடும்பத்தில் அமைதியையும் வளத்தையும் அள்ளிக் கொடுக்கும்.

இன்று புனித ஆமையின் முக்கியத்துவம் குறித்து பார்க்கலாம்.

 • புனித ஆமை கடவுள் விஷ்ணுவுடன் தொடர்புடையது என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.
 • பாற்கடலை கடையும் போது மந்திர மலையை தங்குவதற்கு விஷ்ணு ஆமை அவதாரம் எடுத்தார் என்று புராணங்கள் கூறுகிறது. எனவே இந்த புனித ஆமை கடவுள் ஸ்ரீ கிருஷ்ணனின் மறு உருவம் எனலாம்.
 • இந்த பொருளை உங்கள் வீட்டில் வைப்பதற்கு சில விதிகளை நீங்கள் பின்பற்ற வேண்டும்.

 • இதன் படி செய்யா விட்டால் நேர்மறை ஆற்றல் இல்லாமல் நடுநிலையாக்கப்பட்டு விடும். எனவே இந்த பொருளை சரியான திசையில் பார்த்து வைப்பது மிகவும் முக்கியம்.
 • இதை வீட்டின் நுழைவாயில் கதவில் பொருத்தலாம். ஏனெனில் இந்த வழியாகத்தான் உங்கள் வீட்டினுள் எதிர்மறை எண்ணங்கள் குடி கொள்ளும். இதனால் தான் வீட்டில் பிரச்சினைகள் கொடி கட்டி பறக்கும். எனவே இந்த மாதிரியான வாக்கு வாதங்களை தவிர்க்க இதை அங்கே வையுங்கள்.
 • இதை கிழக்கில் வைத்திருப்பது குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
 • வடகிழக்கு திசையை நோக்கி வைத்தால் வீட்டில் பணப் பற்றாக்குறையே இருக்காது.
 • வீட்டிலும் அலுவலகத்திலும் ஒரு படிக ஆமையை வைத்திருந்தால் அதன் வழியே பண வரவு பொழியும்
 • சில நேரம் நீங்கள் என்னதான் கடினமாக உழைத்தாலும் வேலையில் வெற்றி காண முடியாது. நல்ல வேலை கிடைக்காது, தேர்வில் வெற்றி பெற முடியாமல் கஷ்டப்படுவீர்கள்.
 • இந்த மாதிரியான பிரச்சினையை சமாளிக்க பித்தளையால் செய்யப்பட்ட ஆமையை வீட்டில் வாங்கி வையுங்கள். வேலையில் வெற்றி நிச்சயம்.
 • அதே மாதிரி நிறைய தம்பதியினர் குழந்தை பாக்கியம் வேண்டி வேண்டிக் கொண்டு இருப்பார்கள். அவர்கள் குழந்தை வடிவ ஆமையை வாங்கி வைத்தால் வீட்டில் சீக்கிரமாகவே குழந்தை சத்தம் கேக்கும்.