ஆம்புலன்சில் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட இளம்பெண் விவகாரம்; மருத்துவமனையில் தற்கொலை முயற்சி!

477

ஆம்புலன்ஸ்………

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு, கேரள மாநிலம் பத்தினம்திட்டாவை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அந்த ஆம்புலன்ஸ் டிரைவர் ஆள் நடமாட்டம் இல்லாத சாலையோரத்தில் ஆம்புலன்ஸை நிறுத்தி அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தார்.

இதன் பின்னர் அரசு மருத்துவமனையில் அந்த பெண்ணை அனுமதித்தார். அந்த பெண் நடந்ததை தனது சிகிச்சை கொடுக்க வந்த மருத்துவரிடம் இதைப்பற்றி கூற, அந்த உடனே டிரைவரை கைது செய்து விசாரணையை தொடர்ந்தனர்.


இந்நிலையில், தற்போது அந்த பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர் கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டிருந்த வார்டில் தனது உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றார்.

ஆனால், கதவை உடைத்துக்கொண்டு மருத்துவமனை பாதுகாப்பு ஊழியர்கள் அவரை மீட்டுள்ளனர். இச்சம்பவமானது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.