
கன்னட பிக்பாஸ் சீசன் 3-ல் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் ஜெயஸ்ரீ ராமய்யா. இவர் கன்னடத்தில் கன்னட கொத்திலா, உப்பு குலி காரா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று ஜெயஸ்ரீ ராமையா தனது ஃபேஸ்புக் பக்கத்தில், நான் மிகுந்த மனசோர்வில் உள்ளேன். இந்த உலகத்தை விட்டு விடைபெறுகிறேன் என்ற பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதனை கண்ட அனைவரும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் ஜெயஸ்ரீயின் நண்பர்கள் அவரை தொடர்பு கொண்டு பேச முயற்சித்தனர். ஆனால் அப்பொழுது நடிகை ஜெயஸ்ரீயின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அதனால் அவர்களால் பேசமுடியவில்லை.

இதையடுத்து, நடிகை ஜெயஸ்ரீ ராமையா தனது வீட்டில் தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் வெளியானது.

அதனை தொடர்ந்து நேற்று மாலை ஜெயஸ்ரீ மீண்டும் தனது பேஸ்புக் பக்கத்தில், நான் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருக்கிறேன்.அனைவரையும் மிகவும் நேசிக்கிறேன் என்று அறிவித்திருந்தார். மேலும் முந்தைய பதிவையும் நீக்கிவிட்டார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை ஜெயஸ்ரீ பெங்களூரில் புதிதாக வீடு ஒன்றை வாங்கியதாகவும் அதனால் அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மன அழுத்தத்தில் அவர் தற்கொலை முயற்சி செய்ய எண்ணியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் கன்னட சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.















