மறைந்த பிரபல காமெடி நடிகர் குமரி முத்துவின் மகள் முதல் முறையாக சமூகவலைத்தளங்களில் வீடியோவை பதிவிட்டு, இனி பல விஷயங்களை பேசப் போகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட திரைப்பிரபலங்களை எப்போதும் மறக்க முடியாது. அப்படி ஒருவர் தான் நடிகர் குமரிமுத்து, 728 படங்கள் நடித்துள்ள குமரி முத்து, கடந்த 2016-ஆம் ஆண்டு உயிரிழந்தார்.
இவரின் சிரிப்பிற்கு என்றே ஒரு தனி ரசிகர்களின் பட்டாளம் உள்ளது. தற்போது மீம்ஸ் கிரியேட்டர்கள் கூட, இவரின் வீடியோவை வைத்து மீம்ஸ் போடுவது உண்டு. அந்தளவிற்கு பிரபலமான குமரிமுத்துவின் குடும்பத்தைப் பற்றி பலருக்கும் தெரியாது.
இந்நிலையில் இவரின் மகளான எலிசபத் குமரி முத்து முதன் முறையாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் என்னை உங்களுக்கு தெரியாது, நான் தான் குமரி முத்துவின் மகள் எலிசபத் குமரிமுத்து.
நான் இதுவரை எந்த ஒரு சமூகவலத்தள பக்கங்களில் வந்ததே கிடையாது, இப்போது ஏன் வந்துள்ளேன் என்றால், பல விஷயங்கள் பேச வேண்டி உள்ளது.
பொதுவாக எல்லோரையும் பொறுத்தவரை வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் பலரும் அந்த வெற்றியை நோக்கி நகர்வதில்லை.
அதற்கு நாம் செய்ய வேண்டியது, என்னுடைய அனுபவங்கள் மற்றும் அப்பாவின் அனுபவங்களை வைத்து கூறுகிறேன், நாம் வெற்றி பெற வேண்டும் என்றால் எவ்வளவுக்கு எவ்ளோ அமைதியாக இருக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நாம் வெற்றியை நெருங்குவோம்.
அப்பாவுடைய சிரிப்பு தங்களது முகத்தில் தெரிகிறது. ??? pic.twitter.com/kgjYHAhltj
— IndiaGlitz – Tamil (@igtamil) July 10, 2020
மீண்டும் உங்களை சந்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.