இன்றைய ராசிபலன் (20.01.2024) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

182

இன்றைய ராசிபலன்…

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுறுசுறுப்பான நாளாக இருக்கும். எப்படியாவது கையில் எடுத்த காரியத்தில் வெற்றி அடைந்தே ஆகவேண்டும் என்று உறுதியோடு நிற்பீர்கள். அதற்கான முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். வியர்வை சிந்த சிந்த உழைத்து வெற்றி காணக்கூடிய நாள் இது. உங்களை ஏளனமாக பேசியவர்கள் முன்பு தலைநிமிர்ந்து நிமிர்ந்து நிற்பீர்கள். பயப்படாதீங்க நல்லது நடக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அமைதி தேவை. யார் உங்களைப் பற்றி அவதூறாக பேசினாலும் அவமானப்படுத்தி பேசினாலும் பதில் பேசாதீங்க. அவர்கள் முன்பு எப்படி தலை நிமிர்ந்து வாழ்வது என்று மட்டும் சிந்தியுங்கள். மற்றபடி வாயை திறந்து சண்டை போடுவதானால் எந்த நற்பலனும் நமக்கு கிடையாது. மூன்றாவது நபர் பேச்சை கேட்க வேண்டாம். குடும்பத்தில் பெரியவர்கள் சொல்வதைக் கேட்கவும். பெரியவர்களுக்கு மரியாதை கொடுத்து நடக்கவும். எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று தலைகனத்தோடு நடக்காதீங்க.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனது ஆன்மீக சிந்தனையோடு இருக்கும். கார்த்திகை பௌர்ணமி நாளில் சில பேர் மாலை நேரத்தில் அம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து மனமகிழ்ச்சியை பெறுவீர்கள். உங்களுக்கு அம்பாளின் ஆசிர்வாதம் கிடைக்கும். உங்கள் குடும்பத்திற்கும் கிடைக்கும். இன்றைய நாள் மன நிறைவான நாளாக இருக்கும். வேலை வியாபாரம் எதிலும் பெரிய பிரச்சனைகள் இருக்காது.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சின்ன சின்ன பிரச்சனைகளோடு தொடங்கும். ஆரம்பிக்கும் போதே இவ்வளவு பிரச்சனையா என்று கொஞ்சம் மனசோர்வு இருக்கும். கவலைப்படாதீங்க விடாமுயற்சியுடன் ஈடுபடும் போது உங்களுக்கு வெற்றி கிடைக்கும். வாழ்க்கை துணை உங்களைப் புரிந்து கொண்டு நடந்து கொள்வார்கள். உங்களுக்கு தேவையான விஷயங்களை கேட்காமல் செய்வார்கள். இன்று சந்தோஷம் இருக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் கோபம் நிறைந்த நாளாக தான் இருக்கும். எதுக்கெடுத்தாலும் சிடுசிடினு மூஞ்ச வச்சிக்குவிங்க. உங்களை பார்த்தாலே நிறைய பேருக்கு பயம் வந்துவிடும். முடிந்தவரை அடுத்தவர்களை எடுத்துறிந்து பேசுவதை குறைத்துக் கொள்ளுங்கள். தலைவலி, வேலை பளு இருந்தாலும் அடுத்தவர்களை இப்படி உதாசீனப்படுத்துவது தவறு இல்லையா. இன்றைய சிரமங்களை சமாளிக்க மனதை அமைதியாக வைக்க ஓம் நமசிவாய மந்திரம் சொல்லுங்க.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ரகலையான நாளாக இருக்கப் போகின்றது. நீங்கள் செல்லும் இடமெல்லாம் உங்களோடு பிரச்சனை தொற்றிக் கொண்டு வரும். வீட்டில் மனைவியுடன் சண்டை. அலுவலகத்தில் டீம் லீடர் மேனேஜரின் தொல்லை என்று, சில பல தொல்லைகளை நீங்கள் என்று தாங்கி தான் ஆக வேண்டும். கொஞ்சம் சிரமங்கள் இருக்கக்கூடிய இந்த நாளை சமாளிக்க உங்களை நீங்கள் ரிலாக்ஸ் செய்ய நல்ல பாட்டு கேளுங்கள். நல்ல காமெடி சீன் பாருங்க. மனதை ரிலாக்ஸ் ஆக வைத்துக் கொள்ளவும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பேறித்தனம் இருக்கும். நிறைய சாப்பிட்டு நல்ல ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று தோணும். ஆனால் என்ன செய்வது அன்றாட வேலையை பார்க்கவில்லை என்றால் அதற்கான பாதிப்பு உங்களுக்கு தானே. ஆகவே அளவோடு சாப்பிட்டு உங்கள் வேலையை பார்க்க கிளம்பனும். உங்க பக்கத்தில் சுறுசுறுப்பாய் இருப்பவரை பார்த்து சுறுசுறுப்பை, முட்டி மோதி வர வைக்கணும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த இன்று அதிர்ஷ்டம் வீடு தேடி வரும். நல்ல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அதையெல்லாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது உங்களுடைய கையில் தான் உள்ளது. குடும்பத்தில் இருப்பவர்களுடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். குழந்தைகள் தாய் தந்தை மனைவி என்று இவர்களையும் ஒரு கண் பார்க்க வேண்டும். வேலை வேலை என்று இருந்தால் பிறகு குடும்பத்தின் ஆதரவு கிடைக்காமல் போய்விடும் ஜாக்கிரதை.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய ஆதரவு கிடைக்கும். அதாவது நண்பர்களுடைய ஆதரவு உறவினர்களின் ஆதரவு என்று நீங்கள் கஷ்டப்படும் போது கை தூக்கி விட இவர்கள் எல்லாம் வருவார்கள். இன்று வாழ்க்கையில் அனுபவ பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டிய சந்தர்ப்பங்கள் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. இன்று நிதானமாக எல்லா வேலையும் செய்யுங்கள். அவசரப்படாதீங்க தெரியாத வேலைக்கு சென்று நஷ்டமாக வேண்டாம். தெரிந்த வேலையை தெளிவோடு செய்யுங்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று சவால் நிறைந்த நாளாக இருக்கும். ஒரு விஷயத்தை எடுத்தால் அதில் பல குழப்பங்கள் இருக்கும். குழப்பமான விஷயங்கள் தான் இன்று உங்கள் கையில் வந்து நிற்கும். இன்று காலை எழுந்து பல் தேய்த்தது முதல், மாலை பஸ் இறங்கி வீட்டுக்கு வரும் வரை ஏதாவது ஒரு சவாலை எதிர்கொண்டு இருப்பீர்கள். ஆனால் வெற்றி உங்களுக்கு கிடைக்கும். பயப்படாதீங்க முடிந்தவரை போராடுங்க. நல்லது உங்கள் பக்கம் நிற்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையில் மேலதிகாரிகளிடம் நல்ல பாராட்டை பெறுவீர்கள். புது வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு வேலையில் சின்ன சின்ன பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. கொஞ்சம் கவனமாக இருங்கள். அரசாங்கத்துக்கு புறம்பாக குறுக்கு வழியில் எதுவும் யோசிக்காமல் இருங்க. நஷ்டமே ஆனாலும் நேர்வழியில் செல்வதுதான் நன்மை தரும்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் எதிலும் பொறுமை காக்க வேண்டும். அவசரப்பட்டு பேசிவிடக் கூடாது. உங்களுடைய அந்தரங்க விஷயங்களை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். எல்லோரும் நல்லவர்கள் என்று நினைப்பது நல்லது தான். ஆனால் அதுவே நமக்கு பிரச்சனையாகி விடக்கூடாது அல்லவா ஜாக்கிரதை. ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும் பணத்தை சேமிக்கவும்.