இன்றைய ராசிபலன் (26.01.2024) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

640

இன்றைய ராசிபலன்…

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன இடையூறுகள் வரும். உங்களுக்கு நெருக்கமாக இருப்பவர்களே சில தொந்தரவுகளை கொடுப்பார்கள். அதனால், நண்பர்களும் எதிரியாக மாற வாய்ப்பு உள்ளது. உஷாரா இருங்க. டென்ஷனை குறைத்து பிரச்சனைகளை சமாளிக்க கொஞ்சம் திறமையாக சிந்திக்கவும். வேகத்தோடு சேர்ந்த விவேகம் உங்களுக்கு இன்று வெற்றியைத் தேடித் தரும். வீட்டில் பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தவும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று பயம் நிறைந்த நாளாக இருக்கும். மேல் அதிகாரிகளை பார்த்து பயம், கணவன் மனைவிக்குள் பயம், என்று எதற்கு தான் பயப்படுவீர்கள் என்றே தெரியாது. ஆனால் உள்ளுக்குள் ஒரு மன பயம் இருக்கும். இந்த பதட்டமான சூழ்நிலையில் புதிய முயற்சிகளை எடுக்க வேண்டாம். அன்றாட வேலைகளை பயம் இல்லாமல் பொறுப்புணர்ச்சியோடு செய்தாலே போதும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் இன்று கவலைகள் இல்லாத நாளாக இருக்கப் போறீங்க. மனிதர்கள் என்று இருந்தால் அவர்களுக்கு துன்பங்கள் கஷ்டங்கள் இருக்கும். ஆனால் அதையெல்லாம் மறந்து சந்தோஷமாக இருக்க கூடிய நாள் இது. வாழ்க்கை போன போக்கில் போகட்டும் என்று உங்களுடைய கடமைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். இதனால் பெரிய பாரத்தை, பெரிய சுமையை இறக்கி வைத்தது போல ஒரு உணர்வு ஏற்படும். ஆரோக்கியம் மேம்படும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று ஓய்வு எடுக்கக்கூடிய நாளாக இருக்கும். எல்லா வேலைகளும் இருந்தாலும் பொறுமையாக அதை எல்லாம் செய்து முடித்துவிட்டு, நிம்மதியாக தூங்கிம் அளவுக்கு இன்றைக்கான நாள் உங்களுக்கு இருக்கப் போகின்றது. சந்தோஷமா என்ஜாய் பண்ணுங்க. குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு சந்தோஷம் நிறைந்த நாள் இது. குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் சஞ்சலங்கள் எல்லாம் சரியாகிவிடும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக இருக்கப் போகிறீர்கள். இன்றைக்கான வேலை, நாளைக்கான வேலையையும் சேர்த்து முடித்துவிட்டு வார இறுதியை என்ஜாய் பண்ண தொடங்கி விடுவீர்கள். வருமானம் தேவைக்கு ஏற்ப இருக்கும். வாங்கிய கடனை எல்லாம் திருப்பிக் கொடுக்கக்கூடிய சூழல் அமையும். மன நிம்மதி உண்டாகும். இன்று மாலை முடிந்தால் குடும்பத்தோடு கோவிலுக்கு சென்று இறைவனுக்கு நன்றி சொல்லுங்க.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் இன்று அனாவசியமாக அடுத்தவர்களுக்கு வாக்குக் கொடுக்காதீங்க. சொன்ன வாக்கை நிறைவேற்ற முடியாமல் தவிக்கும் சூழ்நிலை உண்டாகும். இதனால் கெட்ட பெயர் எடுக்கக்கூட வாய்ப்புகள் உள்ளது. குறிப்பிட்ட வேலையை செய்வதற்கு கமிட்மென்ட் கொடுக்க வேண்டும் என்றால், கொஞ்சம் கூடுதல் நேரம், கூடுதல் நாளை சொல்லி கமிட் பண்ணுங்க. முன்கூட்டியே முடித்து விட்டால் பிரச்சனை இல்லை. ஆனால் சொன்ன நேரத்தை தவறும் போது சில பிரச்சனைகள் வரும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். இருந்தாலும் நீங்கள் உங்களுடைய நண்பர்களிடம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்களுடைய முன்னேற்றத்தை கண்டு பொறாமைப்படும் சிலர் உங்களை எதிரியாக பார்ப்பார்கள். நண்பர்களாகவே இருந்தாலும் சில விஷயங்களை வெளிப்படையாக பேச வேண்டாம். குடும்பத்தில் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். சுப செலவுகள் ஏற்படும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று திறமைகள் வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். சில சிக்கலான விஷயங்களை கூட அப்படியே சுலபமாக தீர்த்து வைத்து விடுவீர்கள். பாராட்டுகள் குவியும். பிரமோஷன் கிடைக்கும். மன நிறைவான நாள் இது. சில பேருக்கு ப்ரோமோஷனோடு இடமாற்றம் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. பயப்படாமல் ஏற்றுக் கொள்ளலாம். எதிர்காலத்திற்கு நல்லது.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று ஏற்ற இறக்கம் நிறைந்த நாளாக இருக்கும். காலை எல்லா வேலையும் சுறுசுறுப்பாக நடப்பது போல இருந்தாலும், மதியத்திற்கு மேல் சோர்வு உண்டாக வாய்ப்பு உள்ளது. சின்ன சின்ன இடையூறுகள் வரும். சின்ன சின்ன தோல்விகள் வரும். கவலைப்படாதீங்க. எல்லாம் நல்லதுக்காகத்தான். வெற்றியை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தால் வாழ்க்கையில் ருசி இருக்காது. அப்பப்ப இப்படி கஷ்டங்களும் வரும்போதுதான் வாழ்க்கையின் நிறைய அனுபவ பாடங்களை கற்றுக் கொள்ள முடியும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று மனது ஆன்மீகத்தை தேடும். குலதெய்வ வழிபாடு செய்வது அல்லது குலதெய்வ கோவிலுக்கு செல்வது, குடும்பத்தோடு கோவிலுக்கு செல்வது போன்ற வாய்ப்புகளை கடவுள் உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பார். மன நிம்மதியான நாள் இது. வியாபாரத்தில் கூடுதல் கவனத்தோடு நடந்து கொள்ளுங்கள். அடுத்தவர்களை நம்பி பொறுப்பை ஒப்படைக்க வேண்டாம். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். வாகனத்தில் செல்லும்போது கொஞ்சம் கவனம் இருக்கட்டும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன குழப்பம் இருக்கும். உடன் வேலை செய்பவர்களால் சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். கோபத்தில் வார்த்தைகளை அளவோடு பேசுங்கள். என்னதான் எதிரிகளாக இருந்தாலும், அவர்களும் நம்மைப் போல் மனிதர்கள் தான், தவறு செய்து விட்டார்கள். மன்னிப்போம் மறப்போம் என்ற மந்திரத்தை உங்கள் மனதிற்குள் வைத்துக் கொண்டால் போதும். இன்று நல்லது நடக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று சற்று ஓய்வு நிறைந்த நாளாக தான் இருக்கும். சகோதரர்களால் நல்லது நடக்கும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். உறவுகளைப் பற்றிய அருமை பெருமைகளை நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். தேவையில்லாத மனக்குழப்பத்தை தூக்கி குப்பையில் போடுங்கள். எப்போதும் எதையாவது யோசித்துக் கொண்டே இருக்காதீங்க. எதிர்மறையான சிந்தனை எதிர்மறை விளைவுகளை உண்டு பண்ணிவிடும். நேர்மறையான சிந்தனை நேர்மறை எண்ணங்களை கொடுக்கும்.