இன்றைய ராசிபலன் (27.01.2024) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

806

இன்றைய ராசிபலன்…

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை அதிகமாக இருக்கும். இதனால் உங்களுடைய அன்றாட வேலை சரியாக ஓடாது. சின்ன சின்ன சிக்கல்கள் ஏற்படும். எல்லோருக்கும் நாளைய பற்றிய கவலைய இருக்கத்தான் செய்யும். ஆனாலும் இன்றைய நாள் வேலையை பொறுப்போடு செய்யாமல் இருந்தால், அதுவும் ஆபத்து தானே. கவலைகளை தள்ளி வைத்துவிட்டு அன்றாட வேலைகளை பொறுப்போடு கவனிக்க பாருங்கள்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்கள் இன்று பொறுப்போடு உங்களுடைய வேலைகளை கவனித்துக் கொள்ள வேண்டும். கவனம் சிதறாமல் இருக்கும் பட்சத்தில் பிரச்சனைகள் இல்லை. கவனக்குறைவோடு செய்யக்கூடிய வேலைகள் உங்களுக்கு பெரிய பிரச்சனைகளை கொடுத்து விடும். ஜாக்கிரதை, வேலையில் பொறுப்போடு இருப்பதோடு சேர்த்து குடும்பத்தையும் கொஞ்சம் கவனிக்க வேண்டும். மனைவியுடன் மனம் விட்டு பேச நேரம் ஒதுக்குங்கள். பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்பதை ஒரு கண் பார்த்துக் கொள்ளுங்கள்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சல் இருக்கும். நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள். தவிர்க்க முடியாத காரணம் இருந்தால் மட்டுமே பயணத்தை மேற்கொள்ள வேண்டும். வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உள்ளது. மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளக் கூடாது. சொந்த தொழிலில் சீரான போக்கே நிலவும். பிரச்சனைகள் எதுவும் வராது. அலைச்சலை ஈடு செய்ய உடல் ஆரோக்கியத்தை பெற ஆரோக்கியம் தரும் சாப்பாட்டை சாப்பிடணும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். வார இறுதி நாள் என்பதால் சுறுசுறுப்பாக உங்களுடைய வேலையை முடிக்க ஆயத்தமாவீர்கள். ஞாயிற்றுக்கிழமை ஓய்வு எடுத்தே ஆக வேண்டும் என்று மனதில் ஒரு எண்ணம் தோன்றிவிடும். இதனால் வேலை தானாக சுறுசுறுப்பாக நடக்கும். எந்த ஒரு இடையூறும் வராது. இந்த நாள் இறுதியில் மன நிறைவோடு இருப்பீர்கள். சந்தோஷம் இருட்டிப்பாகும். கடவுளுக்கு நன்றி தெரிவியுங்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் இன்று உங்களுடைய பொறுப்புகளை அடுத்தவர்களிடம் கைமாற்றி விடுவதிலேயே குறியாக இருப்பீர்கள். சோம்பேறித்தனத்தோடு இருப்பீர்கள். இதனாலே சின்ன சின்ன சிக்கல்கள் வர வாய்ப்பு உள்ளது. சொந்த தொழில் யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீங்க. முதலீடு செய்யும் போது கவனம் இருக்கட்டும். உறவுகளுக்குள் சின்ன சின்ன சண்டைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. முன்கோபத்தை குறைத்துக் கொள்ளவும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று நேரமும் காலமும் சூழ்நிலையும் உங்களுக்கு சாதகமாக இருக்காது. நீங்கள் என்ன செய்தாலும் அதற்கு எதிர்மறையாக சில விஷயங்கள் நடக்கும். அதை நினைத்து கவலைப்படாதீங்க. முயற்சிகளை கைவிடாதீர்கள். அன்றாட வேலைகளை கவனத்தோடு செய்தால் பிரச்சனை இருக்காது. மேலதிகாரிகள் சொல்லுவதை கவனமாக கேட்டுக் கொள்ளவும். பணம் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனையில் ஜாக்கிரதையாக இருக்கவும். உங்களுடைய பொருட்களை பத்திரமாக பார்த்துக் கொள்ளவும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதியான நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் சரியாகும். மேலதிகாரிகள் உங்களுக்கு அனுசரணையாக பேசுவார்கள். நீங்கள் செய்த வேலைக்கு உண்டான பாராட்டும் கிடைக்கும். சொந்தத் தொழிலை விரிவு படுத்துவதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ளலாம். சின்ன சின்ன வியாபாரிகள் கூட இன்று நல்ல முன்னேற்றத்தை பெறுவீர்கள். ஆரோக்கியம் மேம்படும் வருமானம் பெருகும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கப் போகின்றது. சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்ற நல்ல விஷயங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. திறமையாக பேசுங்கள். வாயை திறந்து கேட்டால் தான் ஏதாவது கிடைக்கும்.‌ அமைதியாகவே இருந்தால் உங்களுடைய நல்லதை வேற யாரோ ஒருவன் தட்டிச் சென்று விடுவான். ஜாக்கிரதை, வாய் உள்ள பிள்ளை தான் என்று பிழைக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதிக வட்டிக்கு கடன் வாங்காதீங்க. தேவைக்கு ஏற்ப மட்டும் கடன் வாங்கினால் போதும். ஆடம்பர செலவை குறைக்கணும். அனாவசியமாக அடுத்தவர்கள் பேச்சை கேட்டு இன்று ஆடக்கூடாது. அதனால் பொருள் இழப்பும், பண இழப்பும் உங்களுக்கு தான் ஏற்படும். வாழ்க்கைத் துணையுடன் அனுசரித்து சென்றால் பிரச்சனை இருக்காது வாக்குவாதம் செய்யாதீங்க.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று ஆழ்மனதில் இனம் புரியாத பயம் இருக்கும். பிரச்சினை எதுவும் இருக்காது. இருந்தாலும் எந்த ஒரு வேலையையும் முழு மனதோடு செய்யாமல் தவிப்பாகவே இருப்பீர்கள். மன குழப்பம் நீங்க மனதிற்கு பிடித்த இறைவனின் நாமத்தை சொல்லிக்கொண்டே இருங்கள். குழப்பமான மன நிலையில் எந்த ஒரு புது முடிவையும் எடுக்க வேண்டாம். முக்கியமான வேலைகளை நாளை தள்ளிப் போடவும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று குழப்பங்கள் எல்லாம் சரியாக கூடிய நாளாக இருக்கும். பிரச்சனைகள் இருக்கும். ஆனால் அந்த பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவை எடுக்கக்கூடிய திறமை உங்களுக்கு ஆண்டவன் இன்று கொடுக்கப் போகின்றான். இன்று மாலை குடும்பத்தோடு சந்தோஷமாக நேரத்தை செலவு செய்வீர்கள். தொழிலில் இருந்து வந்த பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அசதியான நாளாக இருக்கும். எல்லா வேலையும் சரியாகத்தான் நடந்திருக்கும். இருந்தாலும் ஏனோ தெரியாது ஏதோ ஒரு தொல்லை உங்களை பின்தொடர போகின்றது. ஒரு சின்ன ஃபோன் வந்தா கூட அரை மணி நேரம் பேசி அசந்து போக போறீங்க. நிறைய தண்ணீர் குடிங்க. ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்க நேரத்திற்கு சாப்பிட்டு கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்துக்கோங்க.