இன்றைய ராசிபலன் (30.01.2024) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

522

இன்றைய ராசிபலன்…

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும் நாள். நீங்கள் எதிர்பாராத உறவு உங்கள் வீடு தேடி வரும். அந்த உறவின் மூலம் மகிழ்ச்சி பெருகும். குடும்பத்தில் சுப காரிய நிகழ்ச்சிகள் தொடங்கும். சீக்கிரமே பெரிய அளவில் சுப செலவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதற்கு தயார்படுத்திக் கொள்ளுங்கள். வேலை செய்யும் இடத்தில் நல்லது நடக்கும். இன்று நீங்கள் தொழிலில் எடுக்கக் கூடிய முயற்சிகள் வெற்றியைத் தரும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கடனை தந்தவன் உடனடியாக அதை திருப்பிக் கொடு என்று கேட்கலாம். இதனால் நீங்கள் மன அழுத்தத்திற்கு ஆளாக வாய்ப்பு உள்ளது. கூடுமானவரை வாங்கிய கடனை திருப்பித் தர பாருங்கள். இல்லையென்றால் அவர்கள் கேட்பதற்கு முன்னதாகவே, நீங்கள் அவர்களுக்கு ஒரு ஃபோன் செய்து கால அவகாசத்தை கேட்டுக் கொள்ளுங்கள். வேலை செய்யும் இடத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது. நல்லது நடக்கும். தொழிலில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். பணத்தை தவிர இன்று பெரிய பிரச்சனை வேறு எதுவும் இருக்காது.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று அலுவலகப் பணியில் சின்ன சின்ன முட்டல் மோதல் இருக்கும். யாரிடமாவது சண்டை போட்டுக் கொண்டே இருக்க போறீங்க. இதனால் உங்களுடைய வேலை சரியா நடக்காதது தான் மிச்சம். ஆகவே அடுத்தவர்களிடம் சண்டை போடுவதை விட்டுவிட்டு உங்களுடைய காரியத்தில் கண்ணாக இருப்பது தான் புத்திசாலித்தனம். உங்களை சீண்டுவதற்கு நாலு பேர் இருப்பாங்க. ஆனா அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தால் உங்கள் வேலையை யார் பார்ப்பது. ஜாக்கிரதையாக இருந்துக்கோங்க உஷாரா நடந்துக்கோங்க.

கடகம்

கடக ராசிக்காரர்கள் இன்று அடுத்தவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று தான் நினைப்பீர்கள். ஆனால் இந்த ஊர் உலகம் உங்களை நல்லது செய்ய விடாது. ஏதாவது ஒரு விஷயத்தை அவதூறாக பேசி நீங்கள் செய்ய வேண்டிய நல்லதையும் தடுத்து நிறுத்தும். என்ன செய்வது காலமும் நேரமும் சூழ்நிலையும் உங்களுக்கு சரியாக அமையவில்லை. ஆகவே நீங்கள் நல்லது செய்வதாக இருந்தால் அதை நாளை தள்ளி போடுங்கள். இன்று நல்லது செய்தாலும் உங்களுக்கு கெட்ட பெயர் தான் கிடைக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் இன்று அனாவசியமாக அடுத்தவர்களுக்கு வாக்கு கொடுக்கக் கூடாது. வாக்கு கொடுத்தால் பிரச்சனையில் சிக்கிக் கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கும். முடிந்த உதவியை நேரடியாக செய்து விடுங்கள். நாளை செய்கின்றேன். நாளை மறுநாள் செய்கின்றேன் அவர்களிடம் சென்றால் உதவி கிடைக்கும் என்று கைநீட்டி எதையும் சொல்லிடாதீங்க. முடியும் முடியாது என்ற வார்த்தையோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் இன்று வார்த்தையில் கவனமாக இருக்க வேண்டும். அடுத்தவங்க கிட்ட பேசும்போது தரகுறைவான வார்த்தையை பயன்படுத்தி விட்டால், பிரச்சினை உங்களுக்குத்தான். சண்டை வரக்கூடிய இடத்தில் நீங்கள் நிற்காதிங்க. அந்த இடத்தில் சும்மா நின்று வேடிக்கை பார்த்தாலும் உங்களுக்கு பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. ஜாக்கிரதை, குறிப்பாக கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய டென்ஷன் கொடுக்கக்கூடிய விஷயங்கள்தான் நடக்கப் போகின்றது. பசி நேரத்தில் உங்களை சாப்பிட கூட விட மாட்டார்கள். பசியால் தலைவலியே வந்துவிடும் ஆனால் வேலை முடிந்தாக இருக்காது. அந்த அளவுக்கு வேலை பளு அதிகமாக இருக்க வாய்ப்புகள் உள்ளது. வேலை சுமையை சமாளிக்க நீங்கள் ஏதாவது ஒரு குறுக்கு வழியை தேடித்தான் ஆக வேண்டும். அதற்காக தப்பு தப்பா வேலை பார்க்கக் கூடாது. ஸ்மார்ட் வொர்க் என்று சொல்லுவாங்க அல்லவா அதுபோல ஏதாவது ஒரு வழியை தேர்ந்தெடுங்கள். நன்றாக வேலை தெரிந்தவர்களை கொஞ்சம் காக்கா பிடித்து கூட வச்சுக்கோங்க வேறு வழி இல்லை.

விருச்சிகம்

விருச்சக ராசி காரர்களுக்கு இன்று நன்மை தரக்கூடிய நாளாகவே அமைந்தாலும் புதிய முடிவுகள் எடுப்பதில் உங்களுக்கு குழப்பங்கள் இருக்கும். புதிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளலாமா, புதிய வேலைக்கு செல்லலாமா, இந்த பொருள் வாங்கலாமா வேண்டாமா? இப்படிப்பட்ட சில குழப்பங்கள் உங்கள் மனதில் எழும். சரியான முடிவை எடுக்க முடியாத சூழ்நிலை உண்டாகும். ஆகவே புதிய முடிவை எடுப்பதை நாளை தள்ளிப் போடுங்கள். அன்றாட வேலை அது பாட்டுக்கு தானாக நல்லாவே நடக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் இன்று வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசுவீர்கள். யாரை கண்டு அஞ்ச மாட்டீங்க. மேலதிகாரிகளாகவே இருந்தாலும் உங்கள் பேச்சுக்கு இன்று கட்டுப்படுவார்கள். அந்த அளவுக்கு உங்களுடைய வாக்குத்திறமை இன்று அதிகரிக்கும். குறிப்பாக வக்கீல், பேச்சாளர்கள், பாடகர்கள் இவர்களுக்கெல்லாம் இன்று திறமைகள் வெளிப்படக்கூடிய நாளாக இருக்கப் போகின்றது. வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தினால் வாழ்வில் நினைத்துப் பார்க்க முடியாத அளவு முன்னேற்றம் கிடைக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கப் போகிறது. குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்கள் நீண்ட நாட்களாக செய்யாத வேலையை இன்று செய்து முடித்து சாதனை படைப்பீர்கள். சுத்தம் செய்யக்கூடிய வேலையாக இருந்தாலும் அதை முடித்தால் சாதனை தானே. சுத்தம் என்றால் சும்மாவா. ஆகவே இன்று உங்களுக்கு நீங்களே சபாஷ் சொல்லி கொள்வீர்கள். அந்த அளவுக்கு சுறுசுறுப்பும் சுத்தமும் உங்கள் வீட்டில் இருக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று அலட்சியப் போக்கால் சின்ன சின்ன தவறுகள் உண்டாகும். நமக்கு தெரிந்த வேலைதானே இதை நாம்மை விட வேறு யாராலும் பெஸ்டாக செய்ய முடியாது என்று நினைத்துக் கொண்டே இருப்பீர்கள். டக்குனு அந்த இடத்துல தப்பு நடந்துரும். திட்டு வாங்குவிங்க. ஆகவே பொறுப்புகளில் இருந்து தவறக்கூடாது. கவனம் குறையவே கூடாது பாத்துக்கோங்க.

மீனம்

மீன ராசிக்காரர்கள் இன்று வாயை மூடிக்கொண்டுதான் இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். ஆனால் ஏனோ தெரியாது. உங்களுக்கு முன்பாக உங்கள் வாய் போய் பேசி எல்லாவற்றையும் சொதப்பிவிடும். உங்களுக்கு உங்க வாய் தாங்க பிரச்சனை. கொஞ்சம் பொறுமையா இருங்க. எடுத்தெறிஞ்சு பேசாதீங்க. எனக்கு தான் எல்லாம் தெரியும் என்று பேசாதீங்க. உங்களுக்கு எல்லாம் தெரிந்திருந்தாலும் நீங்கள் பேசாமல் இருந்தாலே இன்று உங்களுக்கு நல்லது நடக்கும்.