இன்ஸ்டாகிராம் பிரபலம் தற்கொலை.. மும்பை நடிகையை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சி : அதிரும் திரையுலகம்!!

531

சத்தீஸ்கர்..

கடந்த 3 நாட்களுக்கு முன்பு மும்பையை சேர்ந்த இளம் சீரியல் நடிகை துனிஷா ஷர்மா ஷூட்டிங்கின்போது தனது ஓய்வறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரது முன்னாள் காதலன் ஷசீன் முகமது கான் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த நிகழ்வு பாலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில்,

தற்போது சத்தீஸ்கரை சேர்ந்த இன்ஸ்டா பிரபலமான இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சத்தீஸ்கர் மாநிலம் ராய்கரில் உள்ள கெலோ விஹார் காலனியில் வசித்து வருபவர் லீனா நாக்வன்ஷி. 22 வயது இளம்பெண்ணான இவர், ஒரு இன்ஸ்டா பிரபலம் ஆவார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனியாக Youtube சேனல் ஒன்றையும் வைத்துள்ளார். அதில் பெரிய அளவில் பார்வையாளர்களை கவரவில்லை என்றாலும், இன்ஸ்டாவில் 10 ஆயிரம் பின்தொடர்புபவர்களை கொண்டுள்ளார்.

பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வரும் இவர், அவ்வப்போது செய்திகளிலும் வருவார். இவருக்கு ஒரு ஆண் நண்பர் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர் இன்று தனது வீட்டிலுள்ள மாடியில் உள்ள தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

இதனை கண்ட குடும்பத்தினர், லீனாவின் உடலை தூக்கிலிருந்து கீழே இறக்கினார். அப்போது அவருக்கு உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து இதுகுறித்து காவல்துறைக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் இதுகுறித்து விசாரணையை தொடங்கினர்.

இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் கூறுகையில், “இன்று மதியம் சுமார் ஒரு மணியளவில் கெலோ விஹார் காலனியில் வசிக்கும் 22 வயதான லீனா என்பவர் வீட்டின் மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் கிடைத்தது.