தூத்துக்குடியில்..

தூத்துக்குடி கேவிகே நகரை சேரந்த இளம்பெண் ஒருவருக்கு, கடந்த நான்கு மாதங்களுக்கு முன் இன்ஸ்டாகிராமில் தாளமுத்து நகரை சேர்ந்த இளைஞருடன் பழக்கம் ஏற்படடுள்ளது. இதைதத்தொடர்ந்து இவர்கள் இருவரும் காதல் மலர்ந்த நிலையில், அவ்வப்போது தனிமையாக சந்திப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இதையடுத்து தூத்துக்குடி தெர்மல் நகர் பகுதியில் இருக்கும் மத்திய தொழில் பாதுகாப்பு படை குடியிருப்பு அருகே இருவரும் இரவு 10 மணியளில் சந்தித்துள்ளனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இளைஞர்கள் இருவர் இவர்களை பார்த்ததும் வாகனத்தை நிறுத்தி இந்த காதலர்களை மிரட்டியுள்ளனர்.

இளம் பெண்ணின் காதலரை அங்கிருந்து விரட்டிவிட்டு, அந்த பெண்ணை தங்களது பைக்கில் இளைஞர்கள் கடத்தி சென்றனர். இதன் பின்னர் தெற்கு கடற்கரை சாலையில் உள்ள ரயில்வே டிராக் பகுதிக்கு அழைத்து சென்று அந்த பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளனர்.

இதையடுத்து அந்த பெண்ணை நடுரோட்டில் விட்டு அங்கிருந்து இளைஞர்கள் இருவரும் தப்பித்து சென்றுள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து பாதிப்பட்ட பெண் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் சம்பவம் நடந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இன்ஸ்டா காதலனை நம்பு வந்து அவர் அந்த பெண்ணை ஆபத்தில் இருந்து காப்பாற்றாமல் கழிவிட்டு சென்ற நிலையில், பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தயுள்ளது.















