இரண்டாம் திருமணம் செய்து கொண்டு கணவருடன் வசித்து வந்த இளம்பெண்! நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

597

இந்தியாவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த இளம்தம்பதி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் கான்பூரை சேர்ந்தவர் விஷ்ணு. இவருக்கும் ஷாலு என்ற இளம்பெண்ணுக்கும் இரண்டாண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

ஷாலு தனது கணவரை பிரிந்த நிலையில், விஷ்ணுவை அவர் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் தம்பதிகள் இருவரும் வீட்டில் சடலமாக கிடந்தனர்.


இது குறித்து விஷ்ணுவின் தந்தை ராம்தீன் கூறுகையில், நாங்கள் அனைவரும் ஒரே வீட்டில் தான் வசித்து வருகிறோம்.

காலையில் தூங்கி எழுந்ததும் இருவரையும் சடலமாக பார்த்தது அதிர்ச்சியை கொடுத்தது என கூறியுள்ளார்.

பொலிசார் கூறுகையில், கொள்ளை முயற்சியில் நள்ளிரவில் இந்த கொலைகள் நடந்திருக்கலாம் என கருதுகிறோம்.

அதே சமயம் ஷாலுவின் முதல் கணவருக்கு இந்த கொலையில் தொடர்பு உள்ளதா எனவும் விசாரித்து வருகிறோம். விரைவில் குற்றவாளிகளை பிடித்து விடுவோம் என கூறியுள்ளனர்.