இரண்டாவதும் பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரம் : பச்சிளம் குழந்தை என்று பாராமல் தாய் செய்த கொடூரம்!!

928

ஈரோடு..

ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகேயுள்ள பூனாட்சி நத்தமேடு பகுதியைச் சேர்ந்தவர் பிரபு (30). இவர் மனைவி சகுந்தலா தேவி (21). இவர்களுக்கு மூன்றரை வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில், சகுந்தலா தேவி மீண்டும் கர்ப்பமடைந்தார்.

அவருக்குக் கடந்த ஏப்ரல் மாதம் 18-ம் தேதி, மீண்டும் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த ஒன்பதாவது நாளான ஏப்ரல் மாதம் 27-ம் தேதி காலை, சகுந்தலா தேவி குழந்தைக்குப் பால் கொடுத்து தூங்க வைத்துவிட்டு, வெளியே வந்தாராம்.

பின்னர் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு வீட்டுக்குள் சென்றபோது குழந்தை உயிரிழந்துகிடந்ததாக அம்மாபேட்டை போலீஸில் புகாரளித்தார். போலீஸார் வழக்கு பதிவுசெய்து பெண் குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.


பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தையின் தலையில் உள்பக்கம் காயம் இருப்பது தெரியவந்தது. எனவே, குழந்தை அடித்துக் கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என்று கருதிய போலீஸார்,

குழந்தையின் தாய் சகுந்தலா தேவியிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில், `இரண்டாவதாக எனக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், பெண் குழந்தை பிறந்தது.

இரண்டாவதாகப் பெண் குழந்தை பிறந்ததால், ஆத்திரத்தில் குழந்தையின் தலையைத் தலையணையால் அமுக்கிக் கொலைசெய்தேன்’ எனக் கூறியிருக்கிறார். அதையடுத்து சகுந்தலா தேவியைக் கைதுசெய்த போலீஸார், கோவை மத்திய சிறையிலடைத்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.