இரண்டு பெண்கள் உள்ளிட்ட ஏழு பேர் கைது!

992

நீர்கொழும்பு சிறைச்சாலை வளாகத்திற்குள் சட்டவிரோத பொருட்களை வீசிய சம்பவம் தொடர்பில் இரு பெண்கள் உள்ளிட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் 31 வயதான பிரதான சந்தேகநபரும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பெண்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் வசிக்கும் 21 வயதான பெண் ஒருவரும், நீர்கொழும்பில் வசிக்கும் 28 வயதான பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.


இந்நிலையில், சந்தேகநபர்களை நாளைய தினம் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, கேகாலை – ருவான்வெல்ல, அம்புலாகல பிரதேசத்தில் வீடொன்றில் இயங்கி வந்த துப்பாக்கி தொழிற்சாலையை சுற்றிவளைத்த பொலிஸ் திட்டமிட்ட குற்றச் செயல்களை விசாரிக்கும் பிரிவினர் அங்கிருந்த சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

மேலும், அங்கிருந்து பல ஆயுதங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.