இறக்குமதிக்கு தடைவிதித்த அரசு! சந்தையில் வாகனங்களுக்கு பற்றாக்குறை!

972

நாட்டில் தற்போது சில சிறப்பு மோட்டார் வாகனங்களுக்கு சந்தையில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் பிரசாத் குலத்துங்க தெரிவித்துள்ளார்.

வாகனங்களை இறக்குமதி செய்வதை தற்காலிகமாக ஒத்திவைக்க அரசு முடிவு எடுத்துள்ளதால், இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து வாகனங்களும் வேகமாக விற்பனை செய்யத் தொடங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,


“இலங்கையில் கொரோனா தொற்று பரவ தொடங்கியதை அடுத்து கடந்த மே 19ம் திகதி முதல் மோட்டார் கார் உள்ளிட்ட வாகன இறக்குமதிக்கு அரசு தடைவிதித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை நிர்வகிக்கும் நோக்கில் இவ்வாறு வாகன இறக்குமதிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. இதனையடுத்து வாகனங்களை வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனால், நாட்டில் தற்போது சில சிறப்பு மோட்டார் வாகனங்களுக்கு சந்தையில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் பிரசாத் குலத்துங்க மேலும் தெரிவித்துள்ளார்.