
எனது குரலாக நீங்களும் உமது முகமாக நானும் பல ஆண்டுகள் வாழ்ந்துள்ளோம். நீங்கள் விரைவில் நலம் பெற வேண்டும் என கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் கொரோனா பாதிப்பால் அண்மையில் சூளைமேட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதை அவரே வீடியோவாக பதிவிட்டு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் அவரது உடல்நிலை மோசம் அடைந்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என இளையராஜா, பாரதிராஜா உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் இதுகுறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் கூறுகையில் அன்பிற்கினிய அன்னைய்யா, உங்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.

எனது குரலாக நீங்களும், உமது முகமாக நானும் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறோம். உங்கள் குரல் இன்னும் ஒலித்திட வேண்டும். மீண்டும் வாருங்கள். தொரகா ரண்டி அன்னைய்யா என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
அன்பிற்கினிய அன்னைய்யா, உங்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.
எனது குரலாக நீங்களும், உமது முகமாக நானும் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறோம்.
உங்கள் குரல் இன்னும் ஒலித்திட வேண்டும். மீண்டும் வாருங்கள். தொரகா ரண்டி அன்னைய்யா ?— Kamal Haasan (@ikamalhaasan) August 16, 2020















