உடலுறவுக்கு மறுத்த மாணவி… வாயில் விஷம் ஊற்றி கொன்ற மாணவர்கள் : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!

1088

ராஜஸ்தான்..

ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூரை சேர்ந்த மாணவி ஹலேனாவில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். மாணவியின் பெற்றோர் பாரத்பூரில் வசித்து வரும் நிலையில், மாணவி ஹலேனாவில் உள்ள பாட்டி வீட்டில் தங்கியவாறு கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில், மாணவி படித்த அதே கல்லூரியைச் சேர்ந்த 5 மாணவர்கள் அந்த மாணவியை ஆசைக்கு இணங்க சொல்லி வற்புறுத்தி வந்துள்ளனர்.

ஆனால், மாணவி அதற்கு சம்மதிக்கவில்லை. இந்த சூழலில், கடந்த புதன்கிழமை அன்று மாணவி கல்லூரியில் இருந்து வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த மாணவர்கள் 5 பேரும் சேர்ந்து விஷம் கலந்த குளிர்பானத்தை மாணவியின் வாயில் வலுக்கட்டாயமாக ஊற்றி குடிக்க வைத்துள்ளனர்.

பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். இதனை அடுத்து பாட்டி வீட்டுக்கு வந்த மாணவி நடந்தவற்றை பாட்டியிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து மாணவி வாந்தி எடுத்து மயங்கியுள்ளார். உடனே அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொன்று சென்றனர்.


ஆனால், அவரை காப்பாற்ற முடியாமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில், பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் ஹலேனா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.