கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள வடலிவிளையைச் சேர்ந்த விஜய குமார் என்பவரின் 22 வயது மகன் பரத் என்பவரும் மணவாளக்குறிச்சி அருகில் உள்ள திருநயினார்குறிச்சி
பகுதியை சேர்ந்த 32 வயதான அனிஷ் என்பவரும் நேற்று இரவு அவர்களின் மற்ற ஆறு நண்பர்களுடன் கண்ணமங்கலம் பகுதியில் உள்ள தோட்டத்தில் மது அருந்த சென்றிருக்கின்றனர்.
அப்போது அவர்களே கோழிக்கறி சமைத்து சாப்பிட்டு மது அருந்தி இருக்கின்றனர். அனிஷ் அதிகமாக மது அருந்திவிட்டு உடனிருந்த நண்பர்களுடனே வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை பரத் கண்டித்துள்ளார்,
இதானல் குடிபோதையில் இருந்த அனிஷ் ஆத்திரத்தில் திடீரென அங்கு கோழி வெட்ட பயன்படுத்திய கத்தியை வைத்து குத்தி கொலை செய்துள்ளார்.
அனிஷ் செய்ததை பார்த்த மற்ற நண்பர்கள் அவ்விடத்திலிருந்து பயந்து ஓடியுள்ளனர். போதையில் இருந்த அனிஷ் மட்டும் நண்பர் உயிரிழந்தது கூட தெரியாமல் அவர் உடலின் மீதே சாய்ந்து உறங்கியுள்ளார்,
விடிந்ததும் அப்பகுதி வழியாக சென்றபோது மக்கள் இதை பார்த்து போலீசில் தகவல் அளித்துள்ளனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பரத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, அனிஷ் மற்றும் மற்ற நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அனிஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.