உயிரை மாய்த்துக் கொண்ட ஏர் இந்தியாவின் பெண் விமானி : காதலனை கைது செய்த பொலிஸார்!!

62

ஏர் இந்தியாவின் விமானியாக பணியாற்றிய 25 வயதான ஸ்ருஷ்டி துலி, மும்பை வீட்டில் தன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தில், அவரது காதலன் ஆதித்யா பண்டிட் தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம் சாட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ருஷ்டி, டெல்லியில் பயிற்சியின் போது ஆதித்யாவை சந்தித்து காதலித்து வந்தார்.

இருவரும் சேர்ந்து மும்பையில் வசித்து வந்த நிலையில், கடந்த 25ம் திகதி ஆதித்யா டெல்லி சென்றுள்ளார். அப்போது ஸ்ருஷ்டி உயிரை மாய்த்துக் கொள்ளப் போவதாக ஆதித்யாவிடம் தெரிவித்துள்ளார்.

ஆதித்யா வீடு திரும்பிய போது ஸ்ருஷ்டி டேட்டா கேபிளால் தூக்கு போட்டுக் கொண்ட நிலையில் இருந்துள்ளார்.

உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார். ஸ்ருஷ்டியின் உறவினரின் புகாரின் பேரில், போலீசார் ஆதித்யாவை கைது செய்துள்ளனர்.