உற்றுப்பார்த்ததால் ஓங்கி அறைந்த திருநங்கையை கொலை செய்த இளைஞர்கள்!!

320

சென்னையில்..

சென்னை சேலையூர் அடுத்த மப்பேடு பகுதியை சேர்ந்த திருநங்கை தயாளன்(50). ஒப்பனை செய்தால் பார்ப்பதற்கு இளம்பெண் போல் காணப்படுவார். இவர் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பாக மேடவாக்கம் அடுத்த கோவிலாஞ்சேரி பகுதியில் கழுத்து, முதுகு, தலை என வெட்டுகாயங்களுடன் அங்குள்ள சிறு பாலம் அருகே குட்டையில் பிணமாக சேலையூர் போலீசார் மீட்டனர்.

உதவி ஆணையாளர் முருகேசன் மேற்பார்வையில் ஆய்வாளர் ரங்கசாமி தலைமையில் தனிப்படை போலீசார் தடயங்களை சேகரித்து விசாரணை செய்ததில் கொலையான திருநங்கை தயாளன் ஆன்ராயிட் செல்போன் காணவில்லை, மேலும் அருகில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்ததால் அங்கு வந்த நபர்களிடமும் விசாரணை நடைபெற்ற நிலையில் தயாளன் செல்போன் கடைசியாக பொன்மார் பகுதியில் அணைக்கப்பட்டது தெரிய வந்தது.

இதனையடுத்து பெரும்பக்கத்தை சேர்ந்த ராஜாஜி(30) பொன்மாரை சேர்ந்த ராமசந்திரன்(26) ஆகிய இருவரை பிடித்து விசாரித்தபோது அவர்கள் திருநங்கை தயாளனை கொலை செய்ததும், சம்பவம் அன்று அங்குள்ள டாஸ்மாக் கடையில் மது குடித்துவிட்டு வெளியே வரும்போது எதிரில் வந்த தயாளன் ஏன் உத்து பார்கிறார் என கேட்டதாகவும்,


அப்போது வாய் தகறாறு ஏற்பட்ட நிலையில் தயாளன் ராஜாஜியை திட்டிவிட்டு கன்னத்தில் அறைந்ததாகவும் தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ராஜாஜி, ராமசந்திரனுடன் அகியோர் தயாளன் பின்னால் சென்று மறைவான இடத்தில் கத்தியால் குத்திவீசி விட்டு செல்போனுடன் சென்றதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர்.

மேலும் ராஜாஜி மீது பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி, அடிதடி வழக்குகளும், ராமசந்திரன் மீது தாம்பரத்தில் செல்போன் பறிப்பு வழக்கு உள்ளதாகவும் அவர்கள் புழல் சிறையில் சந்தித்தபோது நண்பர்களானதும் அடிக்அடி மது குடிக்க ஒன்றாக செல்வது வழக்கமாம். அதுபோல் செல்லும் போது திருநங்கையை பார்த்ததால் வாய்தகராறு ஏற்பட்டு திருநங்கை கன்னத்தில் அறைந்ததால் ஆத்திரத்தில் கொலை செய்துள்ளனர்.