உலக மக்கள் பலரையும் கொந்தளிக்க வைத்த கருப்பினத்தவர் ஜார்ஜ் மரணம்! அன்று நடந்தது என்ன? ஆங்கில ஊடகம் வெளியிட்ட பிரத்யேக வீடியோ காட்சி!

490

அமெரிக்காவில் பொலிசாரின் கைது நடவடிக்கையின் போது ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பினத்தவர் மரணமடைந்த நிலையில், அவரது மரணத்தில் என்ன நடந்தது? தொடர்பாக பிரதேயேக வீடியோவை பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவில் மினியாபொலிஸ் நகரில் மோசடியில் ஈடுபட்டதாக கூறி George Floyd என்ற கருப்பினத்தவர் கைது செய்யப்படும் போது, பொலிசாரின் சில மோசமான நடவடிக்கை காரணமாக உயிரிழந்தார்.

இந்த கைது நடவடிக்கையின் போது, அவரை பொலிசார் கீழே தள்ளி, அதன் பின் அவரின் கழுத்துப் பகுதியில் முழுங்காலை வைத்து அழுத்தியதன் காரணமாக, அவர் மூச்சுவிட முடியவில்லை என்று கெஞ்சுகிறார். ஆனாலும் பொலிசார் மிருகத்தனமாக நடந்து கொண்டதால், அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக, அமெரிக்காவில் கருப்பின மக்களின் போராட்டம் வலுவடைந்தது. அமெரிக்கா மட்டுமின்றி, பிரித்தானியா போன்ற உலகின் பல்வேறு நாடுகளில் போராட்டம் நடைபெற்றது.


இவரின் மரணத்திற்கு காரணமான நான்கு பொலிஸ் அதிகாரிகளில் ஒருவரான Chauvin மூன்றாம் நிலை கொலை குற்றச் சாட்டில் இருந்து, இரண்டாம் நிலை கொலை குற்றம் சாட்டப்பட்டப்பட்டது.

இவர் மட்டுமின்றி அவர் அப்படி நடந்து போது, வேடிக்கை பார்த்த மற்ற நான்கு அதிகாரிகளும் வழக்கை எதிர் கொண்டு வருகின்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் எல்லாம் அப்போது அடுத்தடுத்து வெளியாகின.

இந்நிலையில், தற்போது பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று, பிரத்யேக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இது கைது நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு பொலிசாரின் கமெராவில் இருந்த காட்சிகள் என்று கூறப்பட்டுள்ளது. அதன் படி முதலில் கையில் ஒரு டார்ச் லைட்டுடன், வரும் பொலிசார் ஜார்ஜ் பிளாய்ட் இருக்கும் காரின் ஜன்னல் கதவை தட்டுகிறார்.

அப்போது முதலில் திறக்க மறுக்கும், அவர் அதன் பின் கதவை திறக்கிறார். அப்போது பொலிசார் துப்பாக்கியை காட்டி அவரை பயமுறுத்துகின்றனர். இதைக் கண்ட ஜார்ஜ் உயிர் பயத்தில், தயவு செய்து என்னை சுட வேண்டாம், சுட வேண்டாம் என்று கெஞ்சுகிறார்.

பொலிசார் வருவதற்கு முன் அங்கிருந்து ஓடுவதற்கு நேரம் இருந்த போதும், அவர் தப்பி ஓட முயற்சிக்கவில்லை, அதற்கு முன்னும் அவருக்கு வாய்ப்பு இருந்தது. ஆனால் பொலிசார் வருவதற்கு அவர் பயப்படவில்லை என்பது இந்த வீடியோவில் தெரிகிறது.

அதுமட்டுமின்றி காரை விட்டு வெளியில் வர மறுக்கும் நிலையில், அவரை வெளியில் இழுத்து கை விலங்கை பொலிசார் மாட்டுகின்றனர். ஜார்ஜ் அவர்களிடம் கெஞ்சுகிறார். ஆனால் பொலிசார் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து அவரை பொலிஸ் வாகனம் இருக்கும் பகுதிக்கு அழைத்து செல்கின்றனர். அங்கு ஜார்ஜ் காரின் பின்புறத்தில் உட்கார மறுக்கும் போது, நடக்கும் சம்பவங்கள் அதில் பதிவாகியுள்ளது.