உல்லாசத்திற்கு இடையூறு… கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய மனைவி!!

175

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரைச் சேர்ந்தவர் சரவணன் வயது (30), இவர் செங்கல் சூளையில் சுமை ஏற்றும் வேலை செய்து வந்தார். இந்நிலையில், கடந்த செவ்வாய்கிழமை காலை வீட்டின் அருகே கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார்.

தகவல் அறிந்த அலங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையுண்ட சரவணன் மனைவி ஜோதிகாவிடம் (23) விசாரணை நடத்தினர். விசாரணையில் போலீசாருக்கு பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

அலங்காநல்லூர் வலசையை சேர்ந்த உடப்பன் (22) என்பவர் கொலையுண்ட சரவணன் வசித்த பகுதிக்கு பேவர் பிளாக்ஸ் போட சென்றார். 10 நாட்களுக்கும் மேலாக அப்பகுதியில் பணியாற்றிய உடப்பனுக்கும்,

சரவணன் மனைவி ஜோதிகாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியது. இதனால், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர்.

இருவரையும் தேடி, இரு தரப்பினரிடமும் பேசி, ஜோதிகாவை, ஒரு வாரத்துக்கு முன், கணவர் சரவணனிடம் சேர்த்தனர்.


இந்நிலையில், சம்பவத்தன்று ஜோதிகாவும், உடப்பனும் மீண்டும் சந்தித்துள்ளனர். அப்போது அவர்கள் வாழ்க்கையில் குறுக்கிடும் சரவணனை கொல்ல திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி சரவணன் குடிபோதையில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது உடப்பன் தனது நண்பரான 17 வயது வாலிபருடன் வீட்டுக்குள் புகுந்து இருவரும் சேர்ந்து சரவணனை கழுத்தை அறுத்து கொன்றனர்.

அதன்பிறகு, சரவணனின் சடலத்தை வீட்டில் இருந்து அப்புறப்படுத்த திட்டமிட்டு, அதன்படி உடப்பனும், 17 வயது வாலிபரும் சரவணனின் உடலை வெளியே கொண்டு வந்தனர்.

மேலும் பதற்றம் அடைந்த உடப்பன் சரவணன் உடலை வீட்டின் அருகே வீசிவிட்டு தப்பியோடியதும் தெரிய வந்தது. இதையடுத்து சரவணனின் மனைவி ஜோதிகா (23), அவரது காதலன் உடப்பன் (21), 17 வயது வாலிபர் ஆகியோரை கைது செய்த அலங்காநல்லூர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.