உல்லாசத்துக்கு மறுத்த கல்லூரி மாணவி… சைக்கோ காதலன் செய்த கொடூரம்!!

871

ஆந்திராவில்..

ஆந்திர மாநிலம் ஏலூர் மாவட்டத்தில் உள்ள துக்கிரால நகரில் இளம்பெண் ஒருவர் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த இளம்பெண், அங்குள்ள அரசு பொறியியல் கல்லூரியில் பிடெக் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அந்த மாணவியும் அதே பகுதியை சேர்ந்த அனுதீப் என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர்.

அப்போது காதலர்கள் இருவரும் பைக்கில் ஒன்றாக பல இடங்களுக்கு சுற்றியுள்ளனர். இந்நிலையில், 15 நாட்களுக்கு முன்பு மாணவியை கல்லூரியில் இருந்து அனுதீப் அழைத்து சென்றுள்ளார். இந்தமுறை, ஒரு அறையில் அடைத்து வைத்து உல்லாசமாக இருக்க வற்புறுத்தி உள்ளார்.

போதைக்கு அடிமையான அனுதீப் தினமும் போதை ஊசி போட்டுக் கொள்ளும் பழக்கம் உள்ளவர் என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் கடும் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் திருமணத்துக்கு முன்பாக உல்லாசமாக இருக்க முடியாது என மாணவி மறுத்துவிட்டார். இதனால் கோபமடைந்த அணுதீப் கொதிக்கும் எண்ணெயை மாணவியின் கால்களில் ஊற்றி அவரை சித்திரவதை செய்தார்.


பின்னர் அவர் அசந்த நேரத்தில், அந்த மாணவி காயத்துடன் அங்கிருந்து தப்பித்து வீட்டுக்கு சென்றார். அங்கு தனது பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார். பின்னர் அவரை மருத்துவமனையில் சேர்ந்த பெற்றோர், இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்தனர்.

கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கால்களில் படுகாயம் அடைந்த மாணவி தற்போது மேல்சிகிச்சைக்காக ஏலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் இந்த சம்பவம் பற்றிய பெற்றோர் அளித்துள்ள புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மாணவியிடம் வாக்குமூலம் பெற்று தலைமறைவாகி இருக்கும் அனுதீப்பை தீவிரமாக தேடி வருகின்றனர்.