டெல்லியில் தற்போது பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அங்குள்ள தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்திற்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அங்கு படிக்கும் மாணவர்கள் வெளியே வர முடியாமல் தண்ணீரில் தத்தளித்தனர்.
இந்த தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரில் தத்தளித்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் 2 மாணவிகளும், 1 மாணவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த மற்ற மாணவர்கள் மாநகராட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தினர். மேலும், பயிற்சி மையத்துக்குள் தண்ணீர் வருவதற்கு காரணம், அப்பகுதியில் உள்ள வடிகால்களில் ஏற்பட்ட அடைப்பு தான் காரணம் என்றும் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் பயிற்சி மைய உரிமையாளரை கைது செய்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள மற்றொரு பயிற்சி மையத்தை மூடவும் டெல்லி மாநகராட்சி உத்தரவிட்டது.