ஐயோ இது என்ன கொடுமை… நெருங்கிய தோழியை திருமணம் செய்து புகைப்படத்தை பகிர்ந்த கிரிக்கெட் வீராங்கனை!!

860

இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனை..

பிரபல இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனையாக இருந்து வருபவர் டேனியல் வியாட். இவர் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் தீவிர ரசிகை ஆவார். நட்சத்திர கிரிக்கெட் வீராங்கனையான டேனியல் வியாட், இதுவரை 102 ஒரு நாள் போட்டியிலும், 143 டி 20 போட்டிகளிலும் விளையாடி உள்ளார்.

ஐபிஎல் தொடரை போல, மகளிருக்கான மகளிர் பிரீமியர் லீக் தொடர், இந்தியாவில் (04.03.2023) ஆரம்பமாக உள்ளது. இதில், டேனியல் வியாட்டை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை என தெரிகிறது.

ஒரு வேளை எந்த வீராங்கனையாவது காயம் காரணமாக விலகினால், எந்த அணிகளாவது அவரை எடுக்க முன் வரலாம் என்றும் தெரிகிறது. சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாக இருந்து வரும் டேனியல் வியாட், கடந்த 2014 ஆம் ஆண்டு,


இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் விராட் கோலியை திருமணம் செய்ய ஆசைப்படுவதாக ட்வீட் செய்து ரசிகர் மத்தியில் அதிக கவனம் பெற்றிருந்தார். அந்த அளவுக்கு விராட் கோலியின் தீவிர ரசிகையாகவும் டேனியல் வியாட் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இவர் சமீபத்தில் நடந்து முடிந்த மகளிர் டி 20 உலக கோப்பையிலும் இங்கிலாந்து அணிக்காக ஆடி இருந்தார். மேலும் டேனியல் வியாட்டின் நெருங்கிய தோழியாக ஜார்ஜ் ஹாட்ஜ் உள்ளார். லண்டனில் உள்ள மகளிர் கால்பந்து குழுவான CAA Base -ன் தலைவராகவும் இருந்து வருகிறார் ஜார்ஜ் ஹாட்ஜ்.

இந்த நிலையில், டேனியல் வியாட் மற்றும் ஜார்ஜ் ஹாட்ஜ் ஆகிய இருவரும் சமீபத்தில் தங்களின் காதலை சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ள சூழலில், தாங்கள் நிச்சயம் செய்து கொண்டுள்ளது குறித்து தெரிவிக்கையில்,

மோதிரம் அணிந்துள்ள புகைப்படத்தையும் சமூக வலைத்தளங்களில் அவர்கள் பகிர்ந்துள்ளனர். டேனியல் வியாட் – ஜார்ஜ் ஹாட்ஜ் ஜோடிக்கு தற்போது பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.