ஐ லவ் யூ சொன்ன இளைஞனை தலைமுடியை பிடித்து செருப்பால் அடித்த பெண்கள்!!

481

உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஹாத்ராஸ் மாவட்டத்தில் சாதாபாத் நகரத்தில் 2 பெண்கள் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது இளைஞர் ஒருவர் கேலி செய்ததோடு மட்டுமல்லாமல் ”ஐ லவ் யூ” எனக் கூறியுள்ளனர்.

இதனால் கோபமடைந்த பெண்கள் அந்த இடத்திலேயே இளைஞனை தலைமுடியை இழுத்து, செருப்பால் அடித்து, கடுமையாக தாக்குதல் நடத்தினர்.

இச்சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வீடியோவாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் பெண்கள் இளைஞனை தாக்கும் போது அருகில் பொதுமக்கள் இருந்த நிலையிலும் யாரும் அவர்களை கண்டுகொள்ளவோ தடுக்கவோ இல்லை. மாறாக “அவர்கள் சரியானதை தான் செய்கிறார்கள்” என கூறினர்.

இச்சம்பவம் தொடர்பாக இதுவரை போலீசில் புகார் எதுவும் அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பலரும் அந்தப் பெண்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.