ஒரு குடும்பமும் ஒரு சைக்கிளும் – 70 வருடகால சுவாரசியம்!!

1232

70 வருடங்கள் பயன்பாட்டில் இருக்கும் சைக்கிள் பற்றிய சுவாரஷ்ய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

ஒரு குடும்பம், அதன் நான்கு தலைமுறைகளாக ஒற்றை சைக்கிளைப் பயன்படுத்தி வரும் சம்பவம் கடவுளின் தேசம் என்றழைக்கப்படும் கேரளாவில் அரங்கேறியிருக்கின்றது. அதாவது, கடந்த 70 ஆண்டுகளாக ஒவ்வொரு தலைமுறையினராக அந்த சைக்கிளை பரமாரித்து பயன்படுத்தி வருகின்றனர்.

திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் ஜான் ஜே பால். ஐடி ஊழியரான இவர் கடந்த ஜூன் 3ம் தேதி அன்று சைக்கிளுடன் சேர்ந்து நிற்பது போன்று எடுக்கப்பட்ட குடும்ப புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அதில் அவர், அவரது தாய், பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகள் என பலர் இருந்தனர். இந்த புகைப்படத்தை ஜூன் 3 உலக மிதிவண்டி தினத்தை முன்னிட்டு வெளியிட்டிருந்தார்.

அந்த புகைப்படம் அவரின் வழக்கமான பதிவுகளை விட சற்று அதிகமாக வைரலாகத் தொடங்கியது. காரணம், அந்த சைக்கிள் 70 பழமையான மிதிவண்டி ஆகும்.

அதுமட்டுமின்றி, அந்த சைக்கிளை அவரது தாத்தா, அம்மா, அம்மாவின் சகோகரர்கள் மற்றும் தனது பேரப்பிள்ளைகள் என நான்கு தலைமுறையினர் பயன்படுத்தியிருப்பதாக தெரிவித்திருந்தார்.


இணைவாசிகளைச் சற்றே கவரும் வகையில் அமைந்திருந்தது. எனவே, தற்போது வாகன உலகின் பேசு பொருளாகவும் அது மாறியுள்ளது.

இந்த சைக்கிளை கடந்த 1950ம் ஆண்டு கடற்படையைச் சேர்ந்த ஜான் என்பவர், அவரது தாத்தா மார்ஷல் ஏ பெரெய்ராவிற்கு பரிசாக வழங்கியுள்ளார்.

ஜான், பெரெய்ராவின் நெருங்கிய நண்பர் என கூறப்படுகின்றது. எனவே, இந்த பரிசை அவர் பொக்கிஷ பொருளாகவே கருதியுள்ளார். இதுவும், அந்த சைக்கிளை தற்போது குடும்பத்தில் ஒருவராக எண்ணி பாதுகாத்து வர காரணமாக இருக்கின்றது.

இந்த சைக்கிள் ஓர் ‘சன்’ நிறுவனத்தின் தயாரிப்பாகும். இதனை அந்நிறுவனம் இங்கிலாந்தில் உள்ள கார்ல்டன் தொழிற்சாலையில் வைத்து தயாரித்து, இந்தியாவில் விற்பனைச் செய்தது.

இதைதான் நண்பர் ஜான், மார்ஷல் ஃபெரேராவிற்கு பரிசாக வழங்கினார். எனவே, பெரெய்ரா தனது ஓய்வு மற்றும் களிப்பு விஷயங்களுக்காக வெளியேச் செல்லும்போதெல்லாம் இந்த சைக்கிளையே அதிகம் பயன்படுத்தியுள்ளார்.

மார்ஷல் பணிக்கு பின்னர், ஜான் தே பால்-இன் தாத்தா மூணார் பகுதியில் இருந்த கண்ணன் தேவன் ஹில்ஸ் தேயிலை நிறுவனத்தின் முதன்மை அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.

அப்போது பணிக்கு சென்று வருவது என பல தனிப்பட்ட தேவைகளுக்காக இந்த சைக்கிளை அவர் பயன்படுத்தியிருக்கின்றார்.

இதைத்தொடர்ந்து, அவரது பிள்ளைகள் அலெக்ஸாண்டர் ஷார்பூல், ஷிர்லி பூல் மற்றும் சிரில் பெரெய்ரா ஆகியோர் பயன்படுத்தியிருக்கின்றனர்.
இவர்களே இந்த சைக்கிளை மார்ஷால் பெரெய்ராவிற்கு பின்னர் பயன்படுத்திய இரண்டாம் தலைமுறையினர் ஆவர். இவர்களைத் தொடர்ந்து அவரவர்களின் பிள்ளைகளும், அதாவது ஜான் ஜே பால் ஆகியோர் பயன்படுத்தியிருக்கின்றனர்.

தற்போது நான்காம் தலைமுறையினர், அதாவது, மார்ஷால் பெரெய்ராவின் கொள்ளு பேரப்பிள்ளைகள் இந்த சைக்கிளை பயன்படுத்தி வருகின்றனர்.

பெரும்பாலானோர் சைக்கிள் ஓட்ட பழகிக் கொண்டதே இந்த மிதிவண்டியில்தான் என பெருமிதம் கொள்கிறார் ஜான் ஜே பால். இவ்வாறு, கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக நல்ல பராமரிப்பில் இந்த சைக்கிள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

மேலும், தற்போது அந்த சைக்கிள் அவர்களின் குடும்பத்தில் ஒருவராகவும் மாறியிருக்கின்றது. எனவே, அந்த மிதிவண்டியுடன் இருப்பதைப் போன்ற புகைப்படத்தை ஜான் ஜே பால் வெளியிட்டுள்ளார்.

இந்த சைக்கிள் வெகு நீண்ட காலமாக பயன்பாட்டில் இருந்து வந்தாலும் அதிக சேதத்தைக் காணாமல் இன்றும் உறுதியாக காணப்படுகின்றது. ஆனால், தேய்மானத்தின் காரணமாக அதன் டயர்கள் மட்டும் ஒரு சில முறை மாற்றப்பட்டுள்ளது.

மேலும், சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த மின் விளக்கு திருடப்பட்டதன் காரணமாக காணமல் போயுள்ளது. மற்றபடி, 1950ம் ஆண்டில் வழங்கப்பட்ட அந்த சைக்கிள் தற்போதும் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கின்றது.

இந்த தகவலுடன், ஜான் ஜே பால் மற்றும் அவரது தந்தை, சகோதரர், மாமன் தாய் என அனைவரும் அந்த சைக்கிளை இயக்குது குறித்த படங்களை வெளியிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து அவர் கூறியதாவது, “என் தாத்தா தினமும் மாலை அந்த மிதிவண்டியை கண்ணன் தேவன் கிளப்புக்குச் சென்று டென்னிஸ் விளையாட பயன்படுத்தினார்.

பின்னர், அவரது குழந்தைகள் – அதாவது என் மாமாக்கள் மற்றும் அம்மா ஆகியோர் அந்த சைக்கிளைப் பயன்படுத்தினர்.

பின்னர், எனது மாமாக்கள் வேலைக்காகச் சென்றுவிட்டதால் அது மூணாரிலேயே இருந்தது. அவர்கள் வருகை தரும்போதெல்லாம் இந்த சைக்கிளைதான் அதிகம் பயன்படுத்துவர்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “எனது தாயின் மூத்த சகோதரர் அலெக்சாண்டர் ஷார்ட்பூல், பெங்களூருக்குச் சென்றுவிட்தால், 1981 ஆம் ஆண்டில், அந்த சைக்கிள் திருவனந்தபுரத்திற்கு கொண்டுவரப்பட்டது.
அங்கு, ஷெர்லியின் குழந்தைகள் ஜார்ஜ் மற்றும் ஜான் சைக்கிளைப் பயன்படுத்தத் தொடங்கினர். அவர்கள் வளர்ந்துவிட்டதால் என் சகோதரனின் குழந்தைகள் பயன்படுத்த தொடங்கியிருக்கின்றனர்” என தெரிவித்தார்.

இவ்வாறு, தொடர்ச்சியாக பல தசாப்தங்களாக அந்த சைக்கிள், ஜான் ஜே பால் அவர்களின் குடும்பத்தில் ஒருவராகவும், பயண நண்பராகவும் இருந்து வருகின்றது. தற்போதும் இந்த சைக்கிள் நல்ல உறுதியுடயன் பயன்பாட்டில் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

அத்துடன், அந்த சைக்கிள் தனது குடும்பத்தில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருப்பதாக ஆச்சரியமிக்க தகவல் ஒன்றையும் அவர் தெரிவித்திருந்தார்.

குறிப்பாக, அந்த சைக்கிள் தனது தாத்தாவுடையது என்றும், அதனை அவரது பிள்ளைகள் முதல் கொள்ளு பேரப் பிள்ளைகள் வரை பயன்படுத்தி வருவதாகவும் அவர் கூறியிருந்தார். இது, வாகன ஆர்வலர்கள் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.