ஒரு பாம்பு தன்னைத் தானே தவறுதலாக கடித்துவிட்டால் உயிரிழக்குமா? உள்ளே காத்திருக்கும் எதிர்பாரா ட்விஸ்ட்!

1027

நிறைய பாம்புகள் சில நேரங்களில் தன்னுடைய குட்டியையே விழுங்கிவிடும். வயல் வெளியில் நடந்து சொல்லும் போது, நானே நிறைய தடவை பார்த்திருக்கிறேன். அப்படி மூர்க்கத்தனமான பாம்பு, தன்னைத்தானே கடித்துக்கொள்ளும் காட்சிகளை டிஸ்கவரி சேனலில் பார்த்திருப்போம். பாம்பு தன்னைத்தானே கடித்துக்கொண்டால், அதனுடைய விஷமே அதனைக்கொல்லாதா? என்ற சந்தேகம் வரலாம்.

பொதுவாக எந்த ஒரு பாம்பும் தன்னைத்தானே கடித்துக்கொள்ளாதாம். அப்படி கடித்துக்கொண்டாலும் பாம்புக்கு ஒன்றும் ஆகாது. தன்னுடைய இனத்தை சேர்த்த பாம்பு கடித்தாலும் ஒன்றும் ஆகாது. இயற்கையாகவே தன் இன பாம்புகளின் விஷத்தை எதிர்கொள்ளும் திறன் பாம்புகளிடம் உண்டு. ஆனால் வேறு இன பாம்பு கடித்தால், இறப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

அதே போல பாம்பு கடித்தவர்கள் மயங்கிய நிலையில் இருக்கும் போது, பாம்பு கடிபட்ட இடத்தில் வாய் வைத்து விஷத்தை உறிஞ்சி துப்புவது போன்ற காட்சிகளை சினிமாவில் பார்த்திருப்போம். முறையான பயிற்சி இல்லாமல் தப்பித்தவறியும் அதனை முயற்சி செய்யக்கூடாது. ஒரு பாம்பு கடித்த உடனே, அதனுடைய விஷம் இரத்தத்தில் கலந்து, ரத்தம் உறைய வைப்பதால் தான் உயிரிழப்பு நேரிடுகிறது.


அதே விஷம் இரத்தத்தில் கலக்காமல், நேரடியாக நம்முடைய இரைப்பைக்கு சென்றால், உணவைப் போலவே வயிற்றில் உள்ள நொதிகளால் செரிக்கப்படும். அதனால் தான் பாம்பு கடி பட்டவர்களின், கடிவாயில் வாய் வைத்து விஷத்தை உறிஞ்சி துப்புபவர்களுக்கு ஒன்றும் ஆவதில்லை. ஆனால் அந்த நேரத்தில் ஒரு தவறை மட்டும் செய்துவிடக்கூடாது.

விஷத்தை உறிஞ்சி துப்பும் நபருக்கு வாயில் புண்ணோ, அல்லது உணவுக்குழாயில் அல்சர் போன்று இருந்தால், நல்லது செய்யப்போய், அதுவே அவர்களின் உயிருக்கு உலையாகி விடும். எந்த உடல் தொந்தரவும் இல்லாத, தெளிவான பயிற்சிமிக்க நபர்கள் மட்டுமே இவ்வாறு செய்ய வேண்டும். பாம்பின் விஷம் ரத்தத்தில் கலந்தால் மட்டுமே, உயிரை பறிக்கும் அளவுக்கு வீரியம் பெறும்.