ஒரே சேலையில் தூக்கில் தொங்கிய தம்பதி : ஆதரவின்றி தவிக்கும் 3 குழந்தைகள்!!

447

கணவன், மனைவி இருவரும் ஒரே சேலையில் தூக்கில் தொங்கிய நிலையில், அவர்களின் 3 குழந்தைகளும் ஆதரவின்றி தவிப்பது உறவினர்களையும், அந்த பகுதி மக்களையும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் நயினார்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மனைவி ரேவதி இந்த தம்பதியருக்கு ஜனனி (11) என்ற மகளும், வருண் பகவான் (9), வெற்றிவேல் (7) ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.

கூலித் தொழிலாளியான ஆறுமுகத்திற்கும், அவரது மனைவி ரேவதிக்கும் அடிக்கடி கணவன், மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது இவர்களது குழந்தைகள் மூன்று பேரும் பள்ளிக்கு சென்றிருந்த நிலையில் உறவினர்கள் சிலர் வீட்டுக்கு வந்தனர்.

வீடு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது அறையில், ஒரே சேலையில் கணவன், மனைவி இருவரும் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதில் ஏற்கனவே ரேவதி இறந்து விட்டது தெரிய வந்தது. ஆறுமுகத்தை உடனே திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், குடும்பத்தகராறில் கணவன், மனைவி தூக்குப்போட்டு தற்கொலை கொண்டது தெரியவந்தது.


தம்பதி தூக்கிட்டு தற்கொலை கொண்ட நிலையில், அவர்களது 3 குழந்தைகள் நிராதரவாக அனாதையாக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.