ஒரே மாதிரி தோற்றம் கொண்ட தாயும் மகளும்: தவறுதலாக மகளது கணவன் செய்த தலைகுனியவைத்த செயல்!

656

அமெரிக்கா…..

அமெரிக்காவில் ஒரே மாதிரியான தோற்றம் கொண்ட ஒரு தாயையும் மகளையும் வித்தியாசம் காணமுடியாமல் அவர்களது கணவர்களே திணறிப்போகிறார்களாம்.

முறையே ப்ளோரிடா மற்றும் நியூயார்க்கில் வாழும் Dawn Hubsher (60) மற்றும் Cher Hubsher (30) இருவரையும் அருகருகே பார்ப்பவர்கள், அவர்களை இரட்டையர்கள் என்றே எண்ணிவிடுகிறார்களாம்.

ஆனால், உண்மையில் அவர்கள் தாயும் மகளும்… இன்ஸ்டாகிராமில் 75,000 ரசிகர்களைக் கொண்ட இந்த அதிசய ஜோடி, சமயத்தில் குடும்பத்திலுள்ளவர்களையே குழப்பமடையச் செய்துவிடுகிறார்களாம்.


அப்படித்தான் ஒரு முறை இருவரும் ஒரே மாதிரியாக உடை உடுத்திக்கொண்டு நிற்க, Cherஇன் கணவர் Jared Gopman (30), நேராக மாமியாரிடம் சென்று அவரை தன் மனைவி என்று எண்ணி, அவரது பின் பக்கத்தை தட்டிவிட்டாராம்.

பின்னர் உண்மை தெரிந்ததும் வெட்கத்தில் தலைகுனிந்ததும் Jaredதான். ஒரு முறை, Cherஇன் தாயுடைய தோழி ஒருவர், அவரை Dawn என்று எண்ணி, அவர் பாட்டுக்கு கதை விட ஆரம்பித்துவிட்டாராம்…

இப்படித்தான் அடிக்கடி குழப்பங்கள் நடந்தாலும், தாயும் மகளும் அதையும் என்ஜாய் செய்து நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள்.