கட்டழகை நச்சின்னு காட்டி ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்த அபிராமி!!

2036

அபிராமி..

நடிகை அபிராமி கேரளாவை சேர்ந்தவர். திவ்யா இவரின் நிஜப்பெயர். சினிமாவுக்காக அபிராமி என வைத்துக்கொண்டார். இவரின் பெற்றோர்கள் யோகா ஆசிரியர்கள். துவக்கத்தில் டிவி ஆங்கராகத்தான் தனது கேரியரை துவங்கினார். இவர் முதலில் நடிக்க துவங்கியது மலையாள படத்தில்தான்.

அதன்பின் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். அர்ஜூன் நடிப்பில் வெளியான வானவில் படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். அதன்பின் தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்ளின் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். கமல் எழுதி இயக்கி நடித்த விருமாண்டி படத்திலும் நடித்திருந்தார். இந்த படத்தில் இவரின் கதாபாத்திரம் பேசப்பட்டது.

அந்த படத்திற்கு பின் கணவருடன் அமெரிக்காவில் செட்டிலானார். சினிமாவிலும் அதிகம் நடிக்கவில்லை. 10 வருடங்கள் கழித்து மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கினார். தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார். 36 வயதினிலே, மாறா, சுல்தான், நித்தம் ஒரு வானம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.


விஸ்வரூபம் மற்றும் பூஜா குமாருக்கு பின்னணி குரலும் கொடுத்தார். ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்தும் வருகிறார். ஒருபக்கம், அவ்வப்போது தனது அழகை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் புடவையில் கட்டழகை நச்சின்னு காட்டி அபிராமி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.