கணவனின் கள்ளத்தொடர்பை கண்டித்த மனைவி… கள்ளக் காதலியை கைவிடமுடியாமல் கணவன் செய்த கொடூரம்!!

633

கன்னியாகுமரியில்..

குமரி அருகே வேறு பெண்ணுடனான தொடர்பை கைவிடக்கூறி கண்டித்த மனைவியை, கணவர் அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள அழகப்பபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ்(45). கட்டி தொழிலாளி. இவருக்கு மேரி சைலஜா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர்.

இந்த நிலையில், ஜார்ஜுக்கு, தன்னுடன் கட்டிட வேலை செய்யும் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது.


இதனை அறிந்த மேரி சைலஜா, கணவர் ஜார்ஜை கண்டித்துள்ளார். இது தொடர்பாக கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில், சம்பவத்தன்று மேரி சைலஜா, கணவர் ஜார்ஜிடம் இனி அந்த பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது என தெரிவித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த ஜார்ஜ், அவரை சரிமாரியாக தாக்கி உள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த மேரி சைலஜாவை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து மேரி சைலஜாவின் தாய் அளித்த புகாரின் பேரில் அஞ்சுகிராம் போலீசார், ஜார்ஜ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி மேரிசைலஜா பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து, போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து, கணவர் ஜார்ஜை கைது செய்தனர்.

மேலும், மேரி சைலஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குமரி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.