கணவன் இறந்த அதேநாளில் மனைவியும் மரணம்.. சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!!

449

தமிழகத்தில்..

நாமக்கலின் குமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் நாராயணன்(வயது 68), இவரது மனைவி ராஜேஸ்வரி(வயது 67), அப்பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு குழந்தை இல்லை,

ஒருவருக்கொருவர் பாசமான தம்பதிகளாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை நாராயணன் திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்,

இதுகுறித்து ராஜேஸ்வரி சொந்தக்காரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். கணவன் இறந்ததால் மனமுடைந்த நிலையில் இருந்த ராஜேஸ்வரிக்கும் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது, அவரது உயிரும் பிரிந்தது.


கணவன்- மனைவி ஒரே நாளில் அடுத்தடுத்து உயிரிழந்தது அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியது.