கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்த சோகம்!!

45

சேலம் மாவட்டம் சின்னசேலத்தில் காட்டனந்தல் கிராமத்தில் கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவியும் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சின்னசேலம் அடுத்த காட்டனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லமுத்து(75). இவரது மனைவி ஏலக்கண்ணி(63). இவர்களுக்கு திருமணமாகி 50 வருடங்களுக்கு மேலான நிலையில், 1 மகன் , 3 மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த செல்லமுத்து மூச்சுதிணறல் காரணமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து இறுதி சடங்கிற்கு உறவினர்கள் ஏற்பாடு செய்தனர்.

துக்க நிகழ்வுக்கு வந்திருந்தவர்களுடன் தொடர்ந்து அழுது மன அழுத்தத்தில் இருந்து வந்த ஏலக்கண்ணி, தனது கணவர் உயிரிழந்த அடுத்த 1 மணி நேரத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையேயும், இறுதி சடங்கில் பங்கேற்க வந்திருந்த உறவினர்களிடையேயும் சோகத்தை ஏற்படுத்தியது.