கணவன், மனைவி இருவருமே தூக்கிட்டு தற்கொலை… நிர்க்கதியான 2 குழந்தைகள்!!

66

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த அண்ணாமலை நகர் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர் பிரகாஷ் . இவர் அதே பகுதியில் காய்கறி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.

இவருடைய மனைவி சத்யா, மகன் தீபக், மகள் ஹரிணி. பிரகாசுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை சச்சரவு இருந்து வந்தது. இந்நிலையில் பிரகாஷ் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வந்த போது இது குறித்து கணவன் மனைவி இடையே வழக்கம் போல் தகராறு ஏற்பட்டது.

இதில் மனம் உடைந்த சத்யா ரூமுக்குள் உள்ளே சென்று மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதிர்ச்சி அடைந்த பிரகாஷ் வீட்டிலேயே ஹாலில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தம்பதிகள் இருவரும் நீண்ட நேரம் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்ததில் கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்தது தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


ஒரே நேரத்தில் கணவன் மனைவி தற்கொலை செய்து கொண்டதால் குழந்தைகள் இருவரும் பெற்றோரை இழந்து நிர்க்கதியாக நின்ற காட்சி காண்பவர்கள் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.