சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளினியாக கலக்கி வருபவர் மணிமேகலை.
இவர் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார்.
இந்நிலையில் மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார்.
தனது கணவருடன் குக்கரில் சமைக்கும் புகைப்படத்தையும், பாதுகாப்புக்காக ஹெல்மெட் போட்டு கொண்டு இருக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.
இத்துடன், ”குக்கர் வெடிக்காமல் சமைப்பது எப்படி.? என்று நக்கலாக பதிவிட்டுள்ளார். மணிமேகலையின் இந்த பதிவு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.