கணவரை பிரிந்து வெளிநாட்டில் தனியாக தவிக்கும் மனைவி! கண்ணீர் பின்னணி..!

916

அவுஸ்திரேலியாவில் கணவருடன் செட்டில் ஆக இளம்பெண் நினைத்த நிலையில் கணவரின் விசா மீண்டும் நிராகரிக்கப்பட்டது மனைவியை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

அவுஸ்திரேலிய குடியுரிமை கொண்ட சட்டிண்டர் என்ற இளம்பெண்ணும் , சுமித் என்ற இளைஞரும் கடந்த 2015ல் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் சுமித் spouse விசாவுக்கு விண்ணப்பித்தார். ஏனெனில் மனைவியுடன் நிரந்திரமாக அவுஸ்திரேலியாவில் தங்கவே அவர் அதை செய்தார்.

இந்த சூழலில் விசா காலத்தை மீறி அவுஸ்திரேலியாவில் இருந்ததால் சுமித் தனது சொந்த நாடான இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார். ஏற்கனவே சுமித்தின் விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் கடந்தாண்டு நிராகரிக்கப்பட்டது. இந்த தகவலை சட்டிண்டரின் வழக்கறிஞர் அவரிடம் கூறிய நிலையில் உடைந்து போனார்.

அதாவது மூன்றரை ஆண்டுகளாக கணவருடன் இணைய முடியாமல் அவுஸ்திரேலியாவில் சட்டிண்டர் தவிப்புடன் வாழ்ந்து வருகிறார்.


இந்த நிலையில் இவர்களின் பிரச்சனையை பேசும் Who Gets to Stay in Australia? என்ற ஆவணப்படம் எடுக்கப்பட்டது. அதன் முதல் ஒளிபரப்பு கடந்த புதன்கிழமை வெளியானது. அந்த ஆவணப்படம் படப்பிடிப்பின் போது தான் சட்டிண்டரிடம் அவர் கணவரின் விசா விண்ணப்பம் நிராகரிப்பு குறித்து கூறப்பட்ட போது அவர் கண்ணீர் விட்டார். பின்னர் கழிப்பறைக்குள் சென்று அதிக மருந்துகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டார். அதாவது சட்டிண்டர் – சுமித்தின் உறவு உண்மையானது இல்லை என கூறி அவர்களின் விசா நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை அவர்களின் வழக்கறிஞர் கூறியது ஆவணப்படம் மூலம் தெரியவந்துள்ளது. ஆனால் இன்னும் விசாவுக்கு வாய்ப்பு இருக்கிறது என வழக்கறிஞர் கூறினாலும், சட்டிண்டர் அந்த நம்பிக்கையை இழந்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிடத்திற்கான 25,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் ஒவ்வொரு ஆண்டும் நிராகரிக்கப்படுகிறது என தெரியவந்துள்ளது.