கணவர் பெயரை நெற்றியில் பச்சை குத்திய இளம்பெண்.. வைரலாகும் வீடியோ.. கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!!

183

கர்நாடகா..

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கிங் மேக்கர் டாட்டூ ஸ்டூடியோ உள்ளது. இந்நிலையத்துக்கு கடந்த மார்ச் மாதம் வந்த பெண் ஒருவர் தனது கணவர் சதீஷின் பெயரை தனது நெற்றியில் பச்சையாகக் குத்திக் கொண்டுள்ளார். இதுதொடர்பான வீடியோவை கிங் மேக்கர் டாட்டூ ஸ்டூடியோ இன்ஸ்டாகிராம் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில், “டாட்டூ பார்லர் ஊழியர் ஒரு பேப்பரில் அந்த பெண்ணின் கணவரின் பெயரான சதீஷ் என்பதை எழுதி இந்த எழுத்து ஓகேவா எனக் கேட்க பெண் சம்மதம் தெரிவிக்கிறார். பின்னர் ஊசியை வைத்து பெண்ணுக்கு கணவரின் பெயரான சதீஷ் என்பதை நெற்றியில் டாட்டூவாக பச்சை குத்துகிறார்கள்”.

இந்த வீடியோவை அந்த அந்த டாட்டூ பார்லர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில், இது தற்போது வைரலாகி வருகிறது. கணவர் சதீஷின் மீது கொண்ட அன்பின் காரணமாக அவரது பெயரை நெற்றியில் டாட்டூவாக அவர் போட்டுக்கொண்டார் என்று டாட்டூ பார்லர் அதில் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் 18ஆம் தேதி வெளியான இந்த வீடியோவுக்கு 2.6 லட்சம் பேர் லைக் போட்டுள்ளனர். கணவரின் பெயரை நெற்றியில் பச்சைக் குத்திக் கொண்ட பெண்ணுக்கு பலர் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் பலர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். கணவர் மீது கொண்ட அன்பை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சிலர் அந்த பெண்ணைத் திட்டி வருகின்றனர்.

இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பயனாளர் ஒருவர் கூறும்போது, இது முட்டாள்தனத்தைத் தவிர வேறில்லை. உண்மையான அன்பை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை, அது உங்கள் அக்கறை, பாசம், முன்னுரிமை, எதுவாக இருந்தாலும் அங்கே இருப்பது, ஆதரவளித்தல், மேம்படுத்துதல், புரிதல் ஆகியவற்றால் உணரப்பட வேண்டும்.என்று தெரிவித்துள்ளார்.

மற்றொருவர் ”அது அவர்களின் ஆசை மற்றும் அவர்களின் வாழ்க்கை… அவர்களை நியாயந்தீர்க்காதீர்கள். உங்களுக்கு நிறைய எதிர்மறையான கருத்துக்கள் வந்தாலும் அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம்” என அவர்களுக்கு ஆதரவளித்து கருத்து தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here