கனடாவில் தச்சு வேலை செய்த நபர் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன ஆச்சரியம்!

852

கனடாவில் தச்சு வேலை செய்துவந்த நபருக்கு லொட்டரியில் $1 மில்லியன் பரிசு விழுந்துள்ளது.

Brampton-ஐ சேர்ந்தவர் Zahid Nabbie (53). இவர் தச்சனாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு தான் லொட்டரியில் $1 மில்லியன் பரிசு விழுந்துள்ளது. இதன் மூலம் சாதாரண நிலையில் இருந்த Zahid கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.

அவர் கூறுகையில், எனக்கு இவ்வளவு பெரிய பரிசு விழுந்ததை அறிந்து  உடனடியாக என் மனைவியிடம் சொல்ல மாடிக்கு நான் ஓடினேன். ஆனால் என் மனைவி அதை நம்பவில்லை, ஏனென்றால் நான் நகைச்சுவையாக அது போல பலமுறை கூறி அவரை ஏமாற்றியுள்ளேன்.


இதன் பின்னர் அதற்கான ஆதாரத்தை காட்டியவுடன் அதை நம்பியதோடு இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்தார். பரிசு பணத்தை வைத்து கட்ட வேண்டிய தொகைகளை செலுத்திவிட்டு அடமான கடன்களை அடைக்கவுள்ளேன்.

மேலும் புதிய சொகுசு கார் வாங்க ஆர்வமாக உள்ளேன் என அவர் கூறியுள்ளார்.